Tamilnadu

நலமா கதிர்?அமித்ஷா நேரடி போன் கால்.. மத்திய அரசின் "பிறந்த நாள் பரிசு"..! வெளியான சீக்ரெட்!

kathir and amitshah
kathir and amitshah

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு கடந்த 19 ஆம் தேதியன்று பிறந்த நாள். தன்னுடைய ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் என அனைவரின் வாழ்த்து மழையோடு, முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். அதே போன்று சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதியை சந்தித்தும் வாழ்த்து பெற்றார்.


ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும், பிரதமர் அவர்களும் பிறந்த நாள் வாழ்த்து மடலை கதிர் ஆனந்துக்கு அனுப்பி இருந்தாங்க. இது கூட ஓரளவுக்கு  வாஸ்தவமான ஒன்று தான் என்றாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக போன் செய்து .. ஹெலோ கதிர்.. அவ் ஆர் யூ என கேட்டு...சில பல விஷயம் பேசி... பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்காராம். இதனால் திமுக முக்கிய புள்ளிகள் சிலரும் வாயடைத்து போயுள்ளதாக தகவல் பரவுகிறது. 

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பிரதமர் மோடி அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டும் இருக்கார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. தனக்கு பிடித்த மஞ்சள் ஆடையில் மட்டுமே அதிகமாக வலம் வரும் கதிர் ஆனந்த், ஓவர் கோட் டைப் ஆடையை அணிவது ஒரு ஸ்டைலாக வைத்திருந்தாலும், பிரதமர் மோடி அணிவது போலவே பிரதிபலிக்கும் என்றால் பாருங்களேன். மற்றவர்கள் எல்லாம் பெரிய அரசியல் வாதியாக தங்களை காட்டிக்கொண்டாலும், நெற்றியில் குங்கும பொட்டோடு எப்போதும் மங்களகரமாக ஒரு ஆன்மீகவாதியாக தான் தெரிவார். என்ன ஒன்னு.. இவர் வெளிப்படையாகவே இருப்பார். ஆனால் கட்சியில் அனைத்து பெரும் புள்ளிகளும் குல தெய்வ கோவிலுக்கு செல்வதும், மற்ற கோவில் குளங்களுக்கு யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சென்றும் வருகிறார்கள். அதாவது முடிந்த வரை தகவல் கசியாமல் பார்த்துக்கொள்கிறார்களாம்.. பின்னே பெரியாரிஸ்ட் கொள்கை ஆச்சே .. அப்படி தானே வெளியில் மெயின்டேன் செய்தாக வேண்டும். 


இன்னொரு விஷயம், என்ன வென்றால் சமீபத்தில் கதிர் ஆனந்தின் ஒரு பதிவு விமர்சனத்திற்கு உள்ளானது. ஒரு பொறுப்புள்ள அப்பாவாக, "பெற்றோர்கள் அனுமதியுடன் பிள்ளைகள் திருமணம் செய்துக்கொள்ள  வேண்டும்; அதுவரை காத்திருக்க வேண்டும்; பெற்றோர்களுக்கு தெரியும் எப்போது தம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என" இவ்வாறு குறிப்பிட்டு ஒரு பதிவிட, இவர் என்னமோ  சொல்லக்கூடாதது சொன்ன மாதிரி, கலாச்சார சீரழிவு பேர்வழிகள் பலரும் எதிர் கருத்துக்களை முன் வைத்தனர். ஆனால் இவரது பதிவு பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

நிலைமை இப்படி எல்லாம் இருக்க....எப்படியாவது அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு நிகராக, கட்சி மேலிடத்தில் தங்களுக்கு செல்வாக்கு கிடைக்க சில மூத்த அமைச்சர்கள் மற்றும் சில இளம் அரசியல் வாதிகள் திட்டமிட, சுதாரித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அவர்களை அடக்கி உள்ளாராம். முதல்வர் ஸ்டாலினுக்கும் - துரைமுருகன், கதிர் ஆனந்த்துக்கும் எப்போதும் சிறந்த நட்புறவு உண்டு. அதன் காரணமாக தான் தன்னுடைய பிறந்த நாளன்று கொரோனா காரணமாக மற்றவர்களை சந்திக்கவில்லை என்றாலும், முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று உள்ளார். அப்போதும் மோடி கோட் ஆடையை தான் அணிந்து  சென்றார் என்பது கூடுதல் கவனம் பெறுகிறது.

அடுத்ததா... சமீபத்தில் நடந்த ஒரு விஷயம், கதிர் ஆனந்தின் பிறந்த நாளான கடந்த 19 ஆம் தேதியன்று தான், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பைபாஸ் சாலை அமைத்து மங்களூரு - விழுப்புரம் நெடுஞ்சாலையில் இணைக்கும் புதிய திட்டத்துக்கான அறிவிப்பும்; அதற்கான 221 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் தான், மக்களின் 20 வருட கோரிக்கையாக இருந்து வந்த வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி சுரங்க  பாதையை தனது தொகுதி நிதியிலிருந்து விரைவாக கட்டி முடிக்கப்பட்டு, தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு  திறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர, தன் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடியில் சுரங்க பாதை வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. ஆக மொத்தத்தில் கூட்டி கழித்து பார்க்கும் போது, மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி கதிருக்கு செல்வாக்கு அதிகரிச்சிக்கிட்டே தான் போகுதாம். குறிப்பாக பிறந்த நாள் பரிசாக தொகுதிக்கு பெரிய திட்டம் குறித்த அறிவிப்பும் வந்திருக்கு; உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆசியும் கிடைச்சிருக்கு. ஆக, ஆக.... இனி கதிர் ஆனந்துக்கு.. ஆஹா.. ஒஹோ தான்