Tamilnadu

அந்த காலம் போயே போச்சு...! பதில் சொல்லுமா ஸ்டாலின் அரசு? முக்கிய விவகாரத்தை சுட்டி காட்டிய "பேராசிரியர்" !


பாஜக மாநில பொது செயலாளர் இராம. ஸ்ரீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி திமுக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார் இது குறித்து அவர் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு :-


மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு நிதின் கட்கரி அவர்கள் பேசிய காணொளி காட்சி மிகுந்த மன வேதனையை தரக்கூடிய தரவுகளை சொல்லி இருக்கிறார் அமைச்சர்.  இந்தியா முழுவதும் புதிய சாலை திட்டங்கள் எப்படி எல்லா மாநிலங்களிலும் விரைவாக நிறைவேற்றப்படுகிறது.

பக்கத்தில் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா கூட இதில் எப்படி தீவிர ஆர்வம் காட்டுகிறது என்பதையும் அதேசமயம் தமிழகத்தில் இதுபோன்ற திட்டங்கள் வருவதற்கு மாநில அரசாங்கமே எப்படி தடையாக இருக்கிறது என்பதையும் விளக்கியிருக்கிறார். விடியல் அரசு என்று சொன்னவர்கள் மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகிறது என்று குற்றம் சொன்ன திமுக.

நிதின் கட்கரி அவர்களது மன வருத்தத்திற்கு பதில் சொல்ல வேண்டும் இந்த காணொளியில் தமிழக முதல்வருக்கு தமிழ்நாட்டில் சாலை திட்டங்கள் நிறைவுபெற நான் கோரிக்கை வைக்கிறேன் என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார் என்றால் தமிழகம் எங்கே செல்கிறது? மாநிலத்திற்கு இது வேண்டுமென்று மத்திய அரசை கேட்டுப் பெற்ற காலம்போய் மாநிலத்திற்கு நாங்கள் இதெல்லாம் செய்கிறோம் அதற்கு மாநில அரசாங்கம் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அதை தர மறுக்கிறார்கள் என்பதுதான் நிதின் கட்கரி அவர்களின் மன ஆதங்கம்.

பதில் சொல்லுமா விடியல் அரசு?விழித்துக் கொள்ளுமா ஸ்டாலின் அரசு? பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர். தமிழகத்தில் அதிகம் பேசு பொருளாக மாறியிருக்க வேண்டிய முக்கிய குற்றசாட்டு இதுவென பார்க்க படுகிறது, குறிப்பாக மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற காலம் மாறி மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டி இருப்பது தற்போதைய திமுக அரசின்  தோல்வியாக பார்க்கப்படுகிறது.