Tamilnadu

பிரதமர் விஷயத்தில் தவறு நடந்தது எப்படி? அண்ணாமலை தலைவர் மட்டுமல்ல.. "protocol"- ஐ சும்மா ஜம்முன்னு சொல்லி இருக்காரு பாருங்க.!

Annamalai and modi
Annamalai and modi

பிரதமர் பஞ்சாப் மாநிலம் சென்ற போது, பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திருப்பிய செய்தி நாடெங்கும் பெரும் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் என்பது தவிர முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் யார் எப்படி வியூகம் வகுத்து சூழ்ச்சி செய்தாலும் டக்கு டக்குன்னு கண்டுபிடிச்சுறாரு என மக்கள் பேச தொடங்கி உள்ளனர். இதனால் எதிராளிகள் என்னதான் உருட்டுனாலும், குற்றம் எங்கு நடந்தாலும் அண்ணாமலை கண்டுபிடித்து விடுவதால் வாயடைத்து போயி உள்ளனராம். இந்நிலையில் பிரதமர் விஷயத்தில் பஞ்சாப் மாநில அரசின் பொறுப்பு என்ன என்பதை சுட்டிக்காட்டி பாயிண்ட் பாயிண்டா சில விஷயத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. அதில்,  பிரதமரின் பாதையை மறிக்கலாம், அவரின் பார்வையைத் தடுக்க முடியாது! 


பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... அனைவருக்கும் வணக்கம். பஞ்சாபில் இருக்கும் ஹுசைன்வாலா என்ற பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மோடி அவர்களின் பயணம், பஞ்சாப் மாநில அரசின் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக நிறுத்தப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பாரதப் பிரதமர் தன் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பும் சூழ்நிலை உருவானது. பிரதமர் கலந்து கொள்ளவிருந்த தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் இருந்து 30 கிமீ தூரம் முன்பு இருந்த பாலத்தில் பிரதமர் மோடியின் வாகனத்தொகுப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. பாலத்தின் மறு முனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் உண்மையில் இந்த திடீர் ஆர்ப்பாட்டம் யார் மூலம் நடத்தப்பட்டது என்ற குழப்பம் இப்போதுவரை நிலவி வருகிறது.

அதிலும் பிரதமரின் கார் பாலத்தில் முடங்கியபோது, அவரின் காரை நோக்கி மஞ்சள் நிற பஸ் ஒன்றும் வந்து இருக்கிறது. அந்த வாகனத்தின் உள்ளே ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. உடனே Special Protection Group (SPG)எஸ்.பி.ஜி படையினர், பிரதமர் மோடி அவர்களின் காரை சுற்றி நின்று தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கவும், தடுக்கவும் வேண்டிய பஞ்சாப் மாநில காவல் துறை, கையாலாகாமல்காட்சியளித்தனர். ஆகவே மாநில அரசின், காவல் துறையின் பாதுகாப்பு குறைபாடுகளால் மோடியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.  நம் நாட்டில் மாநில அரசின் மெத்தனத்தால், அம்மாநில காவல்துறையின் அலட்சியத்தால், இந்தியப் பிரதமரின் வாகனத் தொகுப்புக்குக் கொடுக்கப்பட்ட மிக மோசமான பாதுகாப்பு இதுதான்.

இவ்வளவு குழப்பங்கள் இருக்க, உண்மையில் யார்தான் வேலையைச் சரிவர செய்யாமல் இருந்தது? பிரதமரின் பாதுகாப்பிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் என்ன? அதில் எது நேற்றைய சம்பவத்தில் குறைந்தது? பார்ப்போம்: Special Protection Group (SPG) என்னும் சிறப்புப் பாதுகாப்புக் குழு என்பது பிரதமரை மட்டும் பாதுகாக்கும், ஒரு தனி தன்னாட்சி அமைப்பு.  பிரதமருக்கு நெருக்கமான பாதுகாப்பை வழங்கும் பொறுப்பு உயரடுக்கு (SPG)  கமாண்டோ படைக்குத்தான் உள்ளது. Advance Security Liaison (ASL) அல்லது மேம்பட்ட பாதுகாப்பு இணைப்பு பிரதமரின் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட  SPG officials, மத்திய மாநில உளவுத்துறை, Intelligence Bureau (IB) officials, மாநில காவல்துறை state police officials, ஆகியோரை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும்.  பிரதமரின் பயணத்திட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் மத்திய (ASL)  நிறுவன அதிகாரிகளால் ஆவணப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 

திடீரென்று ஒரு மாநில உளவுத்துறையும், காவல்துறையும்,  அம்மாநிலத்திற்கு பிரதமரின் வருகையின்போது, ஒத்துழைக்காமல் போனால் என்ன ஆகும் என்பதற்கான மோசமான உதாரணமாக பிரதமரின் இப்பயணம் நிகழ்ந்துள்ளது. நாட்டின் பிரதமரின் பயணத்தில், சாலைப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போராட்டம், ஆர்ப்பாட்டம், சதித்திட்டம், உளவு, ஆகிய முக்கியமான பொறுப்புக்கள் மாநிலக்காவல் துறையின் வசம் உள்ளது.இதுவரை எதிர்க் கட்சிகள் ஆட்சி செய்த எந்த மாநிலத்திலும் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதே இல்லை. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் நாட்டுக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடிகள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.    

ஏன் என்றால், பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்பை எஸ்பிஜி படைதான் உறுதி செய்ய வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் சாலை போக்குவரத்தின் போது அந்தப் பாதையில் பாதுகாப்பை மாநில போலீஸ்தான் உறுதி செய்ய வேண்டும். பிரதமர் செல்லத் திட்டமிடப்பட்டுள்ள பாதையில், பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, எந்தத் தடையும் இல்லாமல், பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்த்து அதை SPG யுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதாவது பிரதமரின் பயணத்தில் கடக்கும் பாதையை பாதுகாப்பாக வைத்திருப்பது மாநில காவல்துறையின் பொறுப்பாகும். அதைச் செய்யத் தவறிய காங்கிரஸ் அரசு, மன்னிக்க முடியாத வரலாற்றுப் பெரும் பிழையைச் செய்துள்ளது. மாநில காவல்துறை என்பது, அவசர நேரத்தில், எதிர்பாராவிதமாக திடீரென மாற்றப்படும் பயண வழியைத் தயார்படுத்துவது மட்டுமல்லாமல், டிஜிபி அல்லது அப்பொறுப்பிற்கு இணையான ஒரு அதிகாரி பிரதமரின் வாகனத்தொகுப்பில் பயணிக்க வேண்டும். இது நடக்கவில்லை.

"ஹெலிகாப்டரில் செல்ல முடியாது, ஆகவே பிரதமர் மோடி சாலை வழியாக வருகிறார் என்றதும், உடனே பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் அரசு மாற்று திட்டப்படி கூடுதல் படைகளைக் குவித்திருக்க  வேண்டும். அதுவும் நடக்கவில்லை. ஹெலிகாப்டரில் செல்ல பிரதமர் திட்டமிடப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் ஒரு மாற்றுச் சாலை வழி தயாராக வைக்கப்பட்டு, பாதையில் போலீசாரை நிறுத்தி, வரிசைப்படுத்துவது, பிரதமரின் வருகைக்கு குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே, விமான நிலையத்தில் இருந்து சென்றடையும் இடம் வரை முழு ஒத்திகை நடத்தப்பட வேண்டும். இதுவும் நடந்ததா என்பதற்குத் தகவல் இல்லை.

பஞ்சாபில் இது போன்ற ஆர்ப்பாட்டம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பிரதமர் மோடி செல்லும் பாதையில் நடக்க இருந்த போராட்டத்தை அரசால் கண்டுபிடிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியவில்லை என்பதை நம்பத்தான் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மோடி இந்தப் பாதையைப் பயன்படுத்த போவது மாநில அரசுக்கு மட்டுமே தெரியும், அது எப்படி போராட்டக்கார்களுக்குத் தெரிந்தது. இதனால் இந்த சம்பவத்தில் மாநில அரசின் அலட்சியம் தெளிவாகத் தெரிகிறது. அதுபோக போராடியவர்கள் யார் என்ற விளக்கமும் மாநில அரசால் தரப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பஞ்சாப் முதல்வர் மீது தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும், அப்போது மட்டுமே இதில் நடந்த தவறை கண்டறிய முடியும்.

நேற்று ஏற்பட்ட மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து மீண்ட நம் பாரதப் பிரதமருக்கு, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் நிலைக்கவும், பஞ்சாப் மாநில அரசின், இந்த அநாகரீகச் செயலைக் கண்டிக்கும் வகையிலும்,  தமிழகம் முழுவதும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக சிவன் கோவில்களில் மிருத்தியுஞ்சய ஜெபம்  மற்றும் தமிழக பாஜக இளைஞரணி சார்பாக மெழுகுவர்த்தி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. நான் மதுரையில் இன்று வியாழக்கிழமை 6.1.2022 மாலை 5 மணி அளவில் பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்து மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தமிழக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்களின் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் திரு. கரு. நாகராஜன் முன்னிலையில் மாலை 5.30 மணி அளவில் மிருத்தியுஞ்சய ஜெபம் மகளிர் அணி சார்பாக நடைபெற்றது.

சென்னையில் துறைமுகம் தொகுதி தங்கசாலை மகாசக்தி ஹோட்டல் அருகாமையில் தேசிய இளைஞரணித் தலைவர் திரு. தேஜஸ்வி சூர்யா, M.P. அவர்கள் தலைமையில், தமிழக பாஜக இளைஞர் அணி மாநிலத் தலைவர் திரு வினோஜ் பி. செல்வம் அவர்கள் நடத்திய, மெழுகுவர்த்தி ஏந்தும் கண்டன ஊர்வலம் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. செயற்கரிய செய்யும் பெரியோராய், தேசமே தன் உயிர் மூச்சாகக் கருதி வாழும் நம் பாரதப் பிரதமருக்கு நாம் காட்டும் அன்புப்பெருக்கு இந்த பூசையும், ஒளிஊர்வலமும். இதன் மூலம் செயற்குரியன செய்ய மறந்த சிறியோருக்கு நாம் சொல்ல நினைப்பது, பிரதமரின் தொலைதூரப் பாதையை நீங்கள் மறிக்கலாம், அவரின் தொலைநோக்குப் பார்வையைத் தடுக்க முடியாது. நன்றி வணக்கம் அன்புச் சகோதரன் உங்க ‘‘அண்ணா’’ இவ்வாறு பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.