Tamilnadu

அரசியல்பாணியில் மருத்துவமனையில் பதுங்கிய "பாதிரியார்" தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை என்ன?

priests from Kerala
priests from Kerala

தமிழகத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 6 பாதிரியார்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய சூழலில் சிறைக்கு செல்லாமல் மருத்துவமனையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என பதுங்கியுள்ளார். இது அரசியல்வாதிகள் காலம் காலமாக பயன்படுத்தும் பாணி.


இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து பிரபல வழக்கறிஞரும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவருமான குற்றலாநாதன் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் அது பின்வருமாறு :-

நெல்லையில் மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள கிறிஸ்தவ பிஷப் சிறைக்குச் செல்லாமல் தனக்கு உடல்நிலை சரியில்லை என திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவரை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு ரூபிமனோகர் சந்தித்து பேசியுள்ளார்.

நீதிமன்ற காவலுக்கு உட்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாமா ?  சிறைத்துறை நிர்வாகம் இதை அனுமதிக்கிறதா ? வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வரை தான் சொல்லும்வரை அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யக்கூடாது என மருத்துவமனை உயரதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கட்டளையிட்டு உள்ளதாக பரவலாக பேசப்படுவது உண்மையா ? 

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக மணல் திருட்டு வழக்கு சிபிசிஐடி போலீசாரால்  குற்றம்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ பிஷப்புக்கு  சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருவது உண்மையா ? 

மணல் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ பிஷப்காக சட்டம் வளைக்கப்படுகிறதா?  ஆளுக்கு ஒரு நீதியா  மாட்சிமை தங்கிய நீதிமன்றம் இதில் தகுந்த நடவடிக்கை எடுக்குமா  எனவும் குற்றாலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் குற்றசெயலில் ஈடுபட்ட பாதிரியாருக்கு சலுகை காட்ட படுகிறதா? சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி ஆகியுள்ளதா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

More Watch Videos