Tamilnadu

நகர்புற உள்ளாட்சி தேர்தல் திமுக அதிமுக பாஜக வெற்றி வாய்ப்பு எப்படி? ஸ்ரீராம் சேஷாத்திரி கணிப்பு?

Election
Election

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்திரி தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என்னுடைய கணிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில தரவுகள் 


1. திமுக 12 கட்சி கூட்டணி, எதிரே அதிமுக, பாஜக, பாமக, மநீம, நாதக , தேமுதிக, விஜய் ரசிகர் அமைப்பு மற்றும் பல சுயேட்சைகள் காலம் காண்கின்றனர், அதனால் திமுக சுமார் 90% இடங்களை ஜெயிக்க வேண்டும், கள நிலவரப்படி 60 முதல் 70 சதவிகித இடங்களில் வென்றிடுவார்கள் என்று தோன்றுகிறது. இது திமுக கூட்டணிக்கு 2021 தேர்தலில் கிடைத்த வெற்றியிலிருந்து கொஞ்சம் சறுக்கலாக இருக்கும். 

2. திமுக தோராயமாக அணைத்து மாநகராட்சி மேயர் தேர்தலிலும் வெற்றி பெறுவார்கள் ஏனென்றால் அது மறைமுக தேர்வு, மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்டால் மேலும் பல சறுக்கல்களை சந்திக்க நேரிடும் 

3. திமுகவுக்கு பெரிய சவாலாக இருக்கப்போவது கூட்டணி மற்றும் சொந்த கட்சிக்குள் இருந்து நடக்கும் உள்ளடி வேலைகள் தான். அதனை தவிர தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத ஏமாற்றம், பொங்கல் தொகுப்பு ஏமாற்றம் மாக்கள் மனதில் கண்டிப்பாக வோட்டு போடும் பொது தோன்றும்.

4. அதிமுகவுக்கு, பாஜக வெளியே சென்றது சில இடங்களில் சாதகமாக இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். அதிமுகவுக்கும், வாக்கு சதவிகிதம் குறையாமல் இருக்க ப்ரம்ம பிரயத்தனம் செய்யவேண்டும். 

5. பாஜகவுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்காவிட்டாலும், 3ஆவது பெரிய கட்சி என்று நிலைநிறுத்த வாய்ப்பு கிடைக்கும். மேலும் 350 முதல் 400 இடங்கள் வெற்றி பெற்று, நாகர்கோவில், திருநெல்வேலி, திருப்பூர் மேயர் தெரிவுக்கு king  maker  ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம். போட்டியிடும் இடங்களில் 10 சதவிகித வாக்குகள் பெற்றாலே, perception உருவாக்க நல்ல வாய்ப்பு கிட்டும்.

6. முக்கியமாக கவனிக்க வேண்டிய கட்சி நாம் தமிழர் கட்சி. சென்னை போன்ற இடங்களில் அவர்கள் 15 சதவிகித வாக்குகள் பெற்றால் இளைஞர்கள் மத்தியில் சீமானும், அண்ணாமலையும்தான் popular  தலைவராக இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More watch videos