பிரபல Quora வலைதளத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று. ஒருவேளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தால் இந்தியா அதை எப்படி கொண்டு செல்லும்?
பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் அதற்கு அருமையான பதிலை அளித்துள்ளார்... காஷ்மீரை ஆக்கிரமிப்பது தங்களது பிறப்புரிமை, அதற்காக உயிரையும் கொடுப்போம் என்று பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்களை பல காலமாக நம்ப வைத்திருக்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை இராணுவம்தான் சகலமும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது ராணுவத்தின் ஒரு நிர்வாக அமைப்பு பிரிவு போன்றது.
ஒருவேளை ஆக்கிரமிப்பு காஷ்மீர் திரும்ப ஒப்படைக்கப்பட்டால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேவையே இல்லாமல் போகும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை காஷ்மீர் பிரச்சினையை தவிர மற்றபடி ராணுவ தேவைக்கான சர்வதேச பிரச்சினைகள் எதுவும் பெரிய அளவில் கிடையாது. பங்களாதேஷ் இலங்கை நேபாளம் போன்ற நாடுகளில் இருப்பது போல ஒரு சிறிய அளவான ராணுவம் மட்டும் போதுமாக இருக்கும். எனவே ராணுவத்திற்கான செலவு பல மடங்கு குறையும். அது பாகிஸ்தானில் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் போது பல்வேறு ஒப்பந்தங்களை பாகிஸ்தான் தனது வளர்ச்சிக்காக ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.தற்போதைய நிலையில் பாகிஸ்தானியர்கள் மேற்கு எல்லையான ஈரானுடன் மற்றும் வடக்கு எல்லையான ஆப்கானிஸ்தானுடன் எல்லை கடந்து சர்வதேச அளவில் மிகப்பெரிய வியாபாரங்கள் செய்வது பாலைவனம், அந்த நாடுகளின் பொருளாதாரம் போன்ற காரணங்களால் சரியான வாய்ப்பு இல்லாமல் உள்ளது. எனவே இந்தியாவுடன் நல்ல நட்புறவு ஏற்படுத்திக் கொண்டால் பாகிஸ்தான் தனது வியாபாரத்திற்கான முழு சந்தையையும் இந்தியாவிலேயே அமைத்துக்கொள்ள முடியும்.
இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுலா சொல்வதன் மூலமாக பாகிஸ்தானின் வருமானம் மிக மிக அதிகரிக்கும். கல்வி மருத்துவம் போன்ற பல துறைகளிலும் இந்தியாவின் முன்னேற்றம் பாகிஸ்தானியர்களுக்கு பயன்படும்.
இதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டுக்கொடுத்தால் அடுத்த சில வருடங்களில் தன்னிறைவான பொருளாதார சக்தியாக வளர முடியும். திரும்பப் பெற்ற ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தனது மாநிலங்களுள் ஒன்றாக மாற்றி மற்ற இந்திய மாநிலங்கள் பெற்றுள்ள முன்னேற்றத்தை அங்கும் எளிதாக ஏற்படுத்தும்.
source - ஆனந்த சுரேஷ்
More Watch Videos