Tamilnadu

இரண்டு சம்பவங்களை குறிப்பிட்டு மக்களை எவ்வளவு முட்டாளாக நினைக்கிறீர்கள் வெளுத்து எடுத்த பாஜக செய்தி தொடர்பாளர் !

Stallin and  Balu
Stallin and Balu

திமுக மக்களவை எம்.பி  டி.ஆர் பாலு சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி கடும் விமர்சனத்தை உண்டாக்கிய நிலையில் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டி.ஆர் பாலு அளித்த பதில்கள் ஆகிவற்றை பகிர்ந்து மக்களை எவ்வளவு முட்டாளாக நினைக்கிறார்கள் என பதிலடி கொடுத்துள்ளார் பாஜக செய்தி தொடர்பாளர் குமரகுரு. இது குறித்து அவர் தெரிவித்ததாவது பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது திமுக தேர்தல் அறிக்கை - டி.ஆர்.பாலு 


பிறகு ஏன் கொண்டுவரக்கூடாதுன்னு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சொல்றார் - தந்தி டிவி அசோகா என்னம்மா ஒரு individual சொல்றத கேக்கறீங்க? - டி.ஆர்.பாலு சார் அவர் இந்த மாநிலத்தின் நிதி அமைச்சர்? -தந்தி டிவி அசோகா நான் திமுக வின் பொருளாளர் மற்றும் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர். நான் சொல்றது தான்  திமுக நிலைப்பாடு -  டி.ஆர்.பாலு  மக்களை எவ்வளவு முட்டாளா நினைக்கிறாங்க? என கேள்வி எழுப்பி இருக்கிறார் இது தவிர்த்து மற்றொரு விமர்சனத்தையும் குமரகுரு வைத்துள்ளார் அதில்.,

திமுகவின் தலைவராக ஒருவர் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றால் அது அவர்களது கொள்கை. அதை நாம் விமர்சிக்கலாம். மக்களிடத்தில் கொண்டு சென்று அவர்களுக்கு ஒட்டு போடாதீர்கள் என்று கூட சொல்லலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அணைத்து மக்களாலும் தேர்வு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியான திரு.ஸ்டாலின் எல்லா மதத்திற்கும் வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு மதத்திற்கு மட்டும் அதுவும் பெரும்பான்மை மத பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

கனடாவில் அமெரிக்காவில் இங்கிலாந்தில் ஏன் ஹிந்துக்கள் குறைவாக வாழக் கூடிய நியூஸிலாந்து ஜெர்மனி அயர்லாந்து போன்ற நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்  எல்லாம் தன் நாட்டில் வாழும் அணைத்து மதத்தினருக்கும் வாழ்த்து சொல்லுவது மரபு. அதில் எனது பகுத்தறிவிற்கு ஏற்புடையது அல்ல அல்லது தீபாவளி என்பது நரகாசுரன் உலகை எப்படி பாயாக சுருட்டினான் போன்ற அறிவு ஜீவி கேள்விகள் எல்லாம் கேட்காமல், எங்கள் நாட்டில் வாழுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்பிக்கை வைத்து கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுவது ஒரு நாட்டை ஆளும் எங்களது கடமை என்று செயல்படுகிறார்கள். 

இங்கே பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு மட்டும் பகுத்தறிவு பேசுவது என்பது அவர்களை காயப்படுத்துவதை விட பிற சிறுபான்மை மதத்தை மகிழ்விற்ப்பதற்கு மட்டுமே. இதை தான் அனைத்து சிறுபான்மை மக்களும் விரும்புகிறார்கள் என்று இவர்கள் நினைப்பது மடமை எனவும் விமர்சனம் செய்துள்ளார் குமரகுரு.