நடிகர் மன்சூர் அலிகான் மீது தொடர்ச்சியாக பல புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன கடந்த சில மாதம் முன்பு புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதாக மன்சூர் அலிகான் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர், இந்த சூழலில் வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் கதாநாயகி என பெயர் பெற்றவர் கே.டி.ருக்மணி இவருக்கு பல்வேறு சொத்துக்கள் இருக்கின்றன வாரிசு இல்லாத காரணத்தால் இவருக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து, தமிழக அரசின் சொத்தாட்சியர் கடந்த 1996ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதில் சென்னை தி.நகரிலுள்ள கட்டிடம் ஒன்றை அபகரிக்கும் நோக்கில், அந்த கட்டிடத்தில் ஒரு பகுதியை இடித்துவிட்டு மாற்றங்கள் செய்வதற்கு நடிகர் மன்சூர் அலிகான் முயற்சி செய்து வந்த நிலையில் இது குறித்து சொத்தாட்சியர் கவனத்திற்கு செல்ல. நேரடியாக கட்டிடத்தை சென்று பார்வையிட்டார் அதில் பல்வேறு வேலைகளை மன்சூர் செய்தது தெரியவர உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கடும் தவறு என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் நடிகர் மன்சூர் அலிகானை எச்சரித்தசொத்தாட்சியர், அவர் மீது தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக அரசு நிலம் வாரிசு இல்லாத சொத்து என பலவற்றை கைப்பற்ற முயன்றுவரும் மன்சூர் அலிகான் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் கிஷோர் கே சுவாமி இந்த சம்பவம் கூட குறித்து ஒரே வார்த்தையில் கலாய்த்து உள்ளார். அதில் மன்சூர் அலிகானை காரிய கார பைத்தியம் என சொல்லுங்கள் என கலாய்த்து உள்ளார்.
ஏற்கனவே கிஷோர் பல முறை மன்சூர் அலிகானை பைத்தியம் என விமர்சனம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.