தமிழகத்தை சேர்ந்த பாஜக எதிர்ப்பு நிலை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் தற்போது பெரும் சிக்கலை இந்தியாவில் எதிர்கொள்வது மட்டுமல்ல உலக தமிழர்கள் இடையேயும் எதிர்கொண்டு இருப்பது பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
தொடர்ச்சியாக வீரமணி, திண்டுக்கல் லியோனி அவரை தொடர்ந்து திருமாவளவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவேளையில் மலேஷிய தமிழர்கள் இடையே எதிர்ப்பை சந்தித்து இருப்பது அதன் பின்னணியில் என்ன என்ற தகவல்தான் தற்போது ஒட்டுமொத்த திராவிட ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24 -ம் தேதி திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் மலேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது அப்போது தொடர்ச்சியாக இந்து மதத்தை விமர்சனம் செய்யும் வீரமணி மலேஷியாவில் கால் வைக்க கூடாது எனவும், அப்படி வைத்தால் மத மோதல் உண்டாகும் எந்த மதத்தையும் தவறாக பேசாத மலேஷிய மக்கள் வாழும் இடத்தில் வீரமணி வந்தால் ஒற்றுமை குறையும் என மலேசியா உள்துறை அமைச்சகத்தில் இந்து தர்ம சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட உடனடியாக வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இது பெரும் அதிர்ச்சியை திராவிட சித்தாந்தம் பேசுவோருக்கு உண்டாக்கியது, இதையடுத்து மலேஷியா சென்ற திண்டுக்கல் லியோனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்ட நேரத்தை கடந்து உள்ளே வர அவரை வாசலில் நிற்க வைத்து மலேஷியா தமிழர்கள் வெளுத்து வாங்கினர், தமிழ்நாட்டில் இருந்து வாய் கிழிய ஊருக்கு மேடை மேடையில் நின்று கொண்டு உபதேசம் செய்வது ஆனால் நேரில் பார்த்தால் உங்கள் லட்சணம் தெரிகிறது?
குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் எதற்கு மலேஷியா வருகிறீர்கள் என வெளுத்து வாங்கினர். அந்த வீடியோ இணையத்தில் TNNEWS24 வெளியிட பெரும் பரபரப்பு தமிழகத்தில் உண்டானது இதையடுத்து திண்டுக்கல் லியோனி விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது தமிழக அரசியல் சூழல்.
இந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கம் ஓய்வதற்குள் சில நாட்கள் முன்னர் திருமாவளவன் மலேஷியாவில் பேச சென்று கடும் எதிர்ப்பை சந்தித்து வந்து இருக்கிறார் அதிலும் மதம் குறித்து திருமாவளவன் பேச நிறுத்துடா என கிளம்பிய எதிர்ப்பு பெரும் பின்னடைவை திருமாவளவனுக்கு கொடுத்து இருக்கிறது.
திருமாவளவன் மேடையில் பேசும் போது “தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம்.” என்றார். “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்றும் அவர் கூறினார்.
அப்போது மதம் குறித்து திருமாவளவன் பேசியதற்கு அரங்கில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மேடையில் இருந்து பாதியில் கிளம்பினார் திருமாவளவன்.இப்படி தொடர்ச்சியாக மலேஷியா தமிழர்கள் இந்து மதம் குறித்து நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சனம் செய்யும் நபர்களை சுளுக்கு எடுத்து அனுப்புவதால் aathadi👍🏻மலேஷியாவா அவர்கள் குட்டி மோடி ரசிகராக மாறி விட்டார்கள் போதாத குறைக்கு இலங்கை தமிழர்களும் மோடிக்கு ஆதரவாக பேச தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் இருந்து இனி மலேஷியா பயணமே வேண்டாம் என முக்கிய அமைச்சரான இளம் வாரிசு தொடங்கி பலரும் முடிவு செய்து விட்டார்களாம்.
அடுத்த வீடியோவில் அண்ணாமலை நடை பயணம் நடக்கவே கூடாது என ஆளும் கட்சி விரித்த வலை குறித்து பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.