Tamilnadu

தனக்கு தெரியாது கைவிரித்து கேரள அமைச்சர்.. இன்று சிறப்பான சம்பவம் செய்ய போகிறாரா அண்ணாமலை !

annamalai cmo
annamalai cmo

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு வசதியாக, முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே உள்ள மரங்களை வெட்ட அனுமதி வழங்கியதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது குறித்து தனக்குத் தெரியாது என்று கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வர் ஸ்டாலின் பேபி அணையை வலுப்படுத்தும் விதமாக 15 மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதி அளித்து இருப்பதாக கூறி நேற்று முன்தினம் கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்தார், இது குறித்து முதல்வர் அலுவலகமும் செய்தி குறிப்பு வெளியிட்டது.

இந்த சூழலில் மரத்தை வெட்ட தமிழகத்திற்கு அனுமதி அளித்தி இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருப்பது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என கேரளாவை சேர்ந்த வனத்துறை அமைச்சர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து கேரளாவை சேர்ந்த மனோரம்மா பத்திரிகை தெரிவித்துள்ள செய்தி பின்வருமாறு :- 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து கடிதம் வந்த பிறகே இது குறித்து முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிய வந்தது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணைகள் எப்போதுமே அரசியல் விவாதங்களுக்கு உட்பட்டது என்று சசீந்திரன் சுட்டிக்காட்டினார்.  எனவே, இப்பிரச்சினைக்கான முடிவுகள் அதிகாரவர்க்கத்தால் மட்டும் எடுக்கப்படாது. 

இதன் மூலம், இது தொடர்பான அனைத்து முன்னேற்றங்கள் குறித்தும் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தலைமை வன அதிகாரிக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளேன் அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கேரள அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பேபி அணையை வலுப்படுத்தும் வகையில், அணைக்கு கீழே 15 மரங்களை வெட்ட கேரளா அனுமதி வழங்கியதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.  இதனை அவர் நேற்று டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்தார் என மனோரம்மா குறிப்பிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள அரசு அணையை பலப்படுத்த அனுமதி வழங்கியதாக பிணராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த சூழலில் சம்பந்தபட்ட கேரள வனத்துறை மந்திரி தனக்கு அது குறித்து தெரியாது என்று கூறியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியார் அணைக்கு நேரடியாக கேரள அமைச்சர் வந்து அணையை திறந்துள்ளார்.

தமிழக விவசாயிகளை கருத்தில் கொள்ளாமல் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்களிடம் கூட்டணி சேர்ந்து உரிமையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இழந்துவிட்டார் என அண்ணாமலை குற்றம் சுமத்தியிருந்தார், மேலும் இன்று தேனி மாவட்ட ஆட்சி தலைவர் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் அண்ணாமலை பல்வேறு விவகாரங்களில் விமர்சனம் செய்து வரும் சூழலில் தற்போது கேரள வனத்துறை அமைச்சர் பேபி அணையை சுற்றியுள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தது.,குறித்து தங்களுக்கு தெரியாது என கேரள வனத்துறை அமைச்சரே தெரிவித்த சூழலில் தேனியில் நடைபெறவுள்ள பாஜக ஆர்ப்பாட்டத்தில் இது குறித்து அண்ணாமலை என்ன விமர்சனத்தை முன்வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.