பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்பு தமிழகம் திரும்பிய அண்ணாமலை தன்னுடைய கட்சி சாதாரண தொண்டனாக தன்னை சிறப்பித்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு வருகின்ற 2022- ம் ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப்பை தவிர்த்து பிற மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.
எனவே அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றவும் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்களின் கட்சித்தலைமை ஏற்கனவே தொடங்கி இருக்கும் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டம் குறித்த அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
கொரோனா பரவலுக்கு பின்னர் முதல் முறையாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று காணொளி காட்சிக்கு பதிலாக நேரடியாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா, பாஜக தேசிய. தலைவர் ஜே.பி.நட்டா உட்பட 124 தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
இது தவிர பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மாநில பாஜக தலைவர்கள், பாஜக மிக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து கொள்கின்றனர்.வருகின்ற 2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பாஜகவின் அரசியல் தீர்மானங்களை முன்மொழிய அதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழி மொழிந்துள்ளார் இது சஸ்பென்ஸாக அமைந்துள்ளது.
மிக மூத்த பாஜக அரசியல் வாதிகள் மத்திய அமைச்சர்கள் பல மாநில முதல்வர்கள் என பலர் இருக்க யோகி முன்மொழிய அதனை முதல் முறையாக இளம் வயதில் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை வழி மொழிந்த சம்பவம் அரங்கில் இருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் அண்ணாமலை மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே அவரை முன்னிலை படுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை டெல்லியில் வசிக்கும் தமிழகத்தின் மிக மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சபாஷ் சரியான நபரை சரியான நேரத்தில் தமிழக மக்களுக்கு ஆளும் கட்சிக்கு போட்டியாக பாஜக தேசிய தலைமை முன்னிறுத்துவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என நேற்றே நாம் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அண்ணாமலை அதில்., பாரதிய ஜனதா கட்சியின் தனித்துவம் என்னவென்றால் நம் கட்சியின் தேசிய செயற்குழுவில் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் குரலையும் ஒவ்வொரு பகுதியின் எண்ணத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும்.
என்னைப்போன்ற கட்சியின் தொண்டனை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மற்றும் கட்சியின் தேசிய தலைவர் திரு ஜே.பி நட்டா அவர்கள் முன்னால் பேச வாய்ப்பு அளித்ததை பெருமையாக கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை நிச்சயம் தமிழகத்தில் மாற்றத்தை உண்டாக்குவார் நேர்மையான அதிகாரியாக கர்நாடகாவில் வலம் வந்தவர், சிறந்த அரசியல்வாதியாக தமிழகத்தில் வளர்ச்சி அடைவார் என தேசிய தலைமை மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாம்.