மத்தியில் ஆளும் பாஜக உலக அளவில் இந்தியாவின் பெருமையை எடுத்து செல்கிறது. உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவ்வளவு ஏன் தற்போது மூண்டுள்ள ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் கூட இந்தியா தங்களுக்கு தான் ஆதரவு தர வேண்டும் என உக்ரானும், ரஷ்யாவுக்கு தான் ஆதரவு தர வேண்டும் என ரஷ்யாவும் மாறி மாறி சொல்வதை பார்க்க முடிந்தது.
ஆனால் இந்தியா எப்போதும் நடுநிலை வகிப்பது தான் இயல்பு. அதற்கான காரணம் மற்ற நாடுகளின் இறையாண்மையில் இந்தியா எப்போதும் தலையிட விரும்புவதில்லை. அதே போன்று இந்திய நாட்டின் இறையாண்மையை மற்ற நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவதும் இல்லை. இப்படி தனெக்கென தனி வழியாக இந்தியா வெற்றி நடை போட காரணம் பாரத பிரதமர் இந்தியாவை உலக அளவில் எவ்வாறு கொண்டு செல்கிறார் என்பது பொறுத்ததே.
இப்படிப்பட்ட புரதமருக்கு எப்போதும் தமிழ் மீதும் தமிழுக்காக வாழந்தவர்கள் மீதும் அதீத பற்றுகொண்டவர். குறிப்பாக திருவள்ளுவர், பாரதியார் என சொல்லிக்கொண்டே போகலாம். எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசக்கூடியவர் பிரதமர் மோடி. இவருக்கு பாரதியார் என்றால் அதீத பற்றுக்கொண்டவர். பிரதமருக்கு தான் பாரதியார் பிடிக்கும் என்பதை தாண்டி, தற்போது பாரதியாரின் அத்தை பேரன் 96 வயது முதியவருக்கு பிரதமரை மிகவும் பிடிக்கும் என்ற செய்தி கிடைத்து உள்ளது.
இது குறித்து பாஜகவை சேர்ந்த SG சூர்யா தனது முகநூல் பக்கத்தில் ஓர் பதிவிட்டு உள்ளார்.அதில் ...பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்த மகாகவி பாரதியாரின் அத்தை பேரன் 96 வயது திரு.KV கிருஷ்ணன், இவர் வாரணாசியில் வசித்து வருகிறார். வாக்கு சேகரிக்க செல்லும் போது இவர் வீட்டிற்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. ஐயா, இந்த தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரினோம்.
அதற்கு அவர் "எனக்கு 96 வயது ஆகிறது, என்னால் சரியாக நடக்க முடியவில்லை, இருந்தாலும் எப்பாடுபட்டாவது நான் உங்களுக்கு வாக்களித்துவிடுவேன், ஏனனில் பிரதமர் மோடி எனக்கு மிகவும் பிடித்தமானவர்" என்று சொன்னார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது தான் எப்பேற்பட்ட அன்பு, நம்பிக்கை - அவர் சொன்னது என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
இவர் காசியில் வசிக்கும் வீடு, வாரணாசி கேண்ட் சட்டசபை தொகுதியின் வரையரையில் வருகிறது. இந்த வீட்டில் தான் மகாகவி பாரதியார் 1898 முதல் 1903 வரை ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது கூடுதல் சிறப்பு.
- இவ்வாறு பதிவிட்டு உள்ளார். இவருடைய இந்த பதிவு தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
More Watch Videos