பிரபல நாளிதழில் வெளியான செய்தி ஆளும் கட்சியின் தூக்கத்தை கெடுத்துள்ளது இது குறித்து பிரபல நாளிதழ் வெளியிட்ட தகவல் பின்வருமாறு :-
டில்லி உளவுத்துறை வட்டாரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி., குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் அந்த எம்.பி.,க்கு மீண்டும் பிரச்னை ஆரம்பிக்கும் என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.கடந்த 2008லிருந்து, 2013 வரை மத்திய அரசியலில் கோலோச்சிய அவர் ஒரே ஆண்டில் 35 நாடுகளுக்கு சென்று வந்துள்ளாராம். இவருடைய, 'பாஸ்போர்ட்' முழுக்க, பல நாடுகளின் 'விசா' முத்திரை காணப்படுகிறது.
இவருடைய நடவடிக்கைகளை உளவுத்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை என பல அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. இவருடைய, 'வாட்ஸ் ஆப் மெசேஜ்'களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர் தனக்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜில், 'நான் இப்போது எந்த நாட்டில் இருக்கிறேன் என்பதே தெரியவில்லை' என கிண்டலாக சொல்லியிருக்கிறாராம்.இந்த எம்.பி., மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்காக ஜெயிலுக்கும் போய் வந்திருக்கிறார். உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்ததும், இவருக்கு பிரச்னை ஆரம்பிக்கப் போகிறது என்கின்றனர் அதிகாரிகள் என்று அந்த நாளிதழில் செய்தி வெளியானது. இந்த சூழலில் அது தற்போது ஆளும் திமுக அரசை கடுமையான அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது.
நாளிதழில் வெளியான செய்தி யூகத்தின் அடிப்படையில் அது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது, திமுக எம்பி ஜெகத்ரட்சகன்தான் அந்த எம்பி யாக இருக்குமா அல்லது வேறு யாரேனும் இருக்குமா என்ற கோணத்தில் இப்போதே கட்சிக்குள் சலசலப்பு நிகழ்ந்து வருகிறதாம்.
More Watch Videos