Cinema

அந்த சர்ச்சைக்கு நானே முழு பொறுப்பேற்கிறேன்....விஜய்க்கு சம்பந்தமில்லை லோகேஷ் கொடுத்த பதில்!

actor vijay, lokesh kanagaraj
actor vijay, lokesh kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்த படம் "லியோ" இந்த படத்திற்கு தணிக்கை குழு U /A  சான்றிதழ் கொடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரைலர் வெளியான அடுத்த நாளே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் முன்னோட்ட காட்சியின் சாதனையை முறியடித்தது லியோ பட ட்ரைலர். ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த படத்தின் ட்ரைலரில் விஜய் கெட்டவார்த்தை பேசியது அனைவரையும் அதிர்ச்சியாகியது. ஏற்கனவே ஆடியோ வெளியிட்டு விழா இல்லை என்றதும் கோவத்தில் இருந்த ரசிகர்கள், ட்ரைலர்  வெளியிட்டு விழாவில் ரோகிணி தியேட்டரை நொறுக்கியது மூலம் அந்த கோவத்தை தீர்து கொண்டனர் என்று சமூக தளத்தில் பேசப்படுகிறது.


லியோ ட்ரைலரை பார்த்த அனைவரயும் விஜையை விமர்சிக்க தொடங்கினர். இந்து முன்னணி கழகம் சார்பில் விஜி மீதும், படக்குழு மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. படக்குழுவினர் மற்றும் நடிகர் விஜய் எதற்கும் பதில் அளிக்காமல் இருந்த நிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியது; "படத்திற்கு தேவைப்பட்டதால் அந்த வார்த்தை ட்ரைலரில் இடம்பெற்றது. அப்பாவியான ஒரு சாதாரண மனிதன் தான் அழுத்தமான மனநிலைக்கு தள்ளும்போது அந்த சூழலில் எப்படி மாறுகிறான் என்பதற்காகவே அந்த வார்த்தை காட்சி படுத்தப்பட்டது. அந்த வார்த்தை யாருக்கேனும் மனது புண்பட்டாலோ, யாரேனும் கண்டனத்தை தெரிவித்தாலோ. அதற்கு முழு பெறுப்பு நானே. அதற்கும் நடிகர் விஜய்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. 

அந்த காட்சி படம்பிடிக்கும் போதே தளபதி விஜய் என்னிடம் கேட்டார், இந்த வார்த்தையை நான் சொல்ல வேண்டுமா? என்று கேட்டார். கதாபாத்திரத்திற்கு தேவை என்பதால் நான் தான் விஜயை பேச வைத்தேன். இதனால் ஏற்படும் விளைவுக்கு நானே பெறுப்பு" என்று கூறினார். தொடர்ந்து பேசிய லோகேஷ் முன்னதாக ஒரு விழா மேடையில் கலந்து கொண்ட போது முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் என்னிடம் பேசும்பொழுது நான் சினிமா வாழ்க்கையில் இருந்து விளக்குகிறேன் என் தெரிவித்ததும் அவர்கள் என்னை திட்டினார்கள். எனவே நான் இப்போதும் கூறுகிறேன் மொத்தமாக 10 படங்களை மட்டும் எடுத்து விட்டு சினிமாவில் இருந்து விளக்கை விடுவேன் என்று கூறியது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இதனால் அடுத்ததாக ரஜினியின் 171, கைதி 2, விக்ரம் 2, இரும்புக்கைமாயாவி, ரோலக்ஸ் என அவருடைய யுனிவெர்ஸுக்குள்ளாகவே அவருடைய சினிமா கெரியரை முடித்து விடுவார் என்று தெரிகிறது. தற்போது வரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை கொடுத்துவிட்டார். மேலும் கூறிய லோகேஷ் என்னுடைய யுனிவெர்ஸை விக்ரம் 2 படத்தின் மூலம் முடித்து விடுவேன். அதுதான் என்னுடைய யுனிவெர்ஸின் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் இதுவரை வாய் திறக்காமல் இருக்கும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதால் ஏதும் பேசாமல் இருக்கிறாரா? அல்லது லியோ படக்குழுவினருடன் விஜய்க்கு எதாவது கருத்து மோதல் நிலவுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.