Cinema

ராதிகாவிடம் அடிவாங்கிய அந்த யூடூபார்... தேவையா இதெல்லாம்....

ACTOR RADHIKA
ACTOR RADHIKA

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகிவிட்டாலே அதனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அனைவரின் மத்தியிலும் இருந்து வரும். மேலும் அந்த திரைப்படம் குறித்த விளம்பரங்கள் மட்டுமே சாலைகள் மற்றும் திரையரங்குகளின் வெளியில் ஒட்டப்பட்டு இருக்கும். அதுபோன்று விளம்பரங்களை மட்டுமே பார்த்து மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு சென்று புதிதாக வெளியான திரைப்படங்களை பார்ப்பதற்கு ஆர்வமாக நின்று கொண்டு இருப்பார்கள். மேலும் ஏற்கனவே திரைப்படத்தை பார்த்துட்டு வந்தவர்கள் கூட அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அந்த திரைப்படம் குறித்து கருத்துக்களை தெரிவித்து அந்த திரைப்படத்தை சென்று பார்க்குமாறு அவர்களின் கருத்துக்களை கூறி வருவார்கள். 


அதைக் கேட்ட பிறகு மற்றவர்களும் அது திரைப்படத்தை சென்று திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து சினிமா தியேட்டர்களுக்கு சென்று திரைப்படங்களை பார்ப்பார்கள். ஆனால் தற்பொழுது இந்த நிலைமை எல்லாம் மாறிவிட்டது!! ஒரே காலகட்டங்களில் வெளியாகும் திரைப்படங்கள் எல்லாவற்றிற்குமே சமூக வலைதளங்களில் பல மாதிரியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் திரைப்படங்களுக்கு கருத்துக்களை தெரிவித்து அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் சில youtube சேனல்களும் இன்று உருவாகி விட்டன. அதுபோன்ற youtube சேனல்களை திரைப்படங்களுக்கு ரிவ்யூ கூறும் சேனல்கள் என்ற பெயரிலும் பலர் அழைத்து வருகின்றனர். இன்று திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றாலே திரைப்படம் குறித்த விளம்பரங்கள் எந்த அளவிற்கு அதிகமாக பரப்பப்படுகிறதோ அதே அளவிற்கு அந்த திரைப்படத்தை பார்த்த சிலர் அதற்கு ரிவ்யூ வழங்கும் வேலைகளையும் செய்து வருகின்றனர்.

மேலும் திரையரங்குகளில் சினிமாவை பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடமும் இன்றைய மீடியாக்கள் மைக்கை வைத்துக் கொண்டு திரைப்படம் குறித்த ரிவியூகளை கேட்டு தெரிந்து கொள்கின்றனர். இவ்வாறு இவர்கள் கொடுக்க ரிவ்யூ ஆனது சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாக பதிவிடப்படுகிறது. எனவே ஒரு திரைப்படத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் தோன்றினாலே உடனடியாக சமூக வலைதளங்களில் இது போன்று ரிவ்யூ வீடியோக்களை பார்க்கும் என்னும் தற்போதைய மக்கள் மனதில் இருந்து வருகிறது. திரைப்படம் நன்றாக இருந்தாலும் கூட ரிவ்யூகளில் சில நேரம் தவறான கருத்துக்கள் கூறுவதினால் நல்ல திரைப்படங்கள் கூட சரியாக வரவேற்பு கிடைக்காமல் போய்விடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. எனவே ஒரு திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்றாலே அதற்கான விமர்சனங்கள் எப்படி இருக்கிறது?? அத்திரைப்படத்தின் ரிவ்யூ என்ன?? போன்றவற்றை பார்த்த பிறகு தான் அந்த திரைப்படத்தையே பார்ப்பதற்கு செல்கின்றனர். 

அதிலும் சில குறிப்பிட்ட நபர்கள் திரைப்படத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்குடனே செயல்பட்டு வருவார்கள். இது போன்ற நபர்கள் ஒரு திரைப்படத்தில் ஏதேனும் குறை சொல்ல வேண்டும் என்றால் அந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயினிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட விஷயங்களை கூட சேர்த்து கூறி வருகின்றனர். இதற்கு தற்பொழுது பதிலடி கொடுக்கும் விதத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராதிகா இது போன்ற ரிவ்யூ கூறுபவர்களை புழுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.. அதாவது..சங்கர், லோகேஷ் கணகராஜ் போன்ற இயக்குனர்கள் எடுக்கும் திரைப்படங்களை இவர்களால் எடுக்க முடியாது ஆனால் உக்காந்து திரைப்படத்திற்கு நெகட்டிவான கருத்துக்களை மட்டும் இவர்களால் கூற முடியும். இது போன்ற புழுக்கள் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தை பற்றி பேசி தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்து அந்த காசு சாப்பிட்டு வருகிறார்கள் என்றால் அவர்கள் மதிப்பானவர்களே கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் இதனால் தன்னுடைய உழைப்பும் வெற்றியும் எதையுமே தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் நாங்கள் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளோம் அதை முட்டாள்தனம் என்று நினைத்து இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறது.