Politics

IPAC பிரசாந்த் கிஷோரை தெரியும் அதிமுகவிற்கு வேலை செய்யும் சுனிலை தெரியுமா? அந்த ஐடியாவை கொடுத்தது இவர்தானாம்?

IPAC பிரசாந்த் கிஷோரை தெரியும் அதிமுகவிற்கு வேலை செய்யும் சுனிலை தெரியுமா? அந்த ஐடியாவை கொடுத்தது இவர்தானாம்?
IPAC பிரசாந்த் கிஷோரை தெரியும் அதிமுகவிற்கு வேலை செய்யும் சுனிலை தெரியுமா? அந்த ஐடியாவை கொடுத்தது இவர்தானாம்?

திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுப்பது IPAC என்ற அமைப்பு எனவும் அதன் தலைவர் பிரசாந்த் கிஷோர் என்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரியும், அதே நேரத்தில் அதிமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் சுனில் என்பவர் யார் என்பது பலருக்கும் தெரியாத தகவல், தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் அனைத்து நாளிதழ்களிலும் திமுகவின் நில அபகரிப்பு முதல் பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டி விளம்பரம் செய்தி வடிவில் வெளிவந்தது.


இது திமுக தலைமையை நிலை குலைய செய்தது, அப்போதுதான் யார் இந்த வேலையை செய்தது என பலரும் கேள்வி எழுப்பி கொண்டிருக்க, சுனில் என்ற பெயர் அதிக அளவில் உச்சரிக்க பட்டது, அதிமுகவிற்கு வியூகம் வகுக்கும் சுனில் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி கொண்டு இருக்கின்றன, அதில் ஒரு வைரல் தகவலை பார்க்கலாம்.

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நீங்கள் பிரசாந்த் கிஷோர் மூளையை வாடகைக்கு எடுத்து தானே தேர்தலை சந்திக்கிறீர்கள் என்கிறார் அதிமுகவை சேர்ந்தவர் கேட்க,நீங்கள் மட்டும் என்னவாம் சுனில் மூளையை வைத்து தானே தேர்தல் தந்திரங்களை செய்கிறீர்கள் என்கிறார் திமுகவை சேர்ந்தவர் பதிலுக்கு கேட்கிறார் 

பிரசாந்த் கிஷோர் பலருக்கும் தெரியும் யார் இந்த சுனில்?பதினைந்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில்  பிரசாந்த் கிஷோர் பணிபுரிந்த நிறுவனத்தில் அவருக்கு நிகரான  இன்னொரு மூளைக்காரர் இந்த சுனில் , 2011-ஆம் ஆண்டு  குழந்தைகள் வளர்ச்சி  ஊட்டச்சத்து திட்ட மேம்பாட்டிற்காக அமெரிக்க நிறுவனம் பிரசாந்த் கிஷோர் சுனில் குழுவை குஜராத்திற்கு  அனுப்பி வைத்தது.

பிரசாந்த் கிஷோர் மோடிக்காக 2012 ல் தேர்தல் பணியாற்றினார்,2014 பாராளுமன்றத் தேர்தலிலும் மோடி பிரதமராக  பிரசாந்த் கிஷோர்ன் இன்னொரு தலையாக சிந்தித்தது எல்லாம் இந்த சுனில் தான்,2015ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் உடன் ஏற்பட்ட பிணக்கத்தால் ஐபேக் நிறுவனத்திலிருந்து சுனில் வெளியேறினார் .

சுனிலின் தேர்தல் வியூகங்களை புரிந்த ஸ்டாலின் மருமகன் சபரீசன் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுக்கு வீயூகம்  வகுக்க அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தார், 2014 பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது திமுக போதாத குறைக்கு,7 தொகுதிகள் வரை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு பரிதாப நிலையில் இருந்த திமுகவை 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றியின் விளிம்பு வரை அழைத்துவந்தார் சுனில் .

வெறும் 1 % வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக ஆட்சி அமைந்தது, பாராளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த திமுக, அதிமுகவிற்கு நிகராக முன்னேறி வருகிறது என்றால் அதற்கு எது மாதிரியான வளர்ச்சி தேவை என நினைத்து பாருங்கள், சுனிலின் தேர்தல் வீக்கங்களை கண்டு அப்போது  ஜெயலலிதாவே ஆச்சரியப்பட்டதாக  சொல்வார்கள், குறிப்பாக திமுகவின் மிரட்டலான அன்றைய விளம்பரங்கள் ஜெயலலிதாவையே சோர்வடைய வைத்தன .

தொடர்ந்து 2019 பாராளுமன்ற தேர்தலிலும் புதுச்சேரி உட்பட திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற வீயூகம் வகுத்தவர்  இந்த சுனில் தான் .ஆனாலும் பிரசாந்த் கிஷோர் போல சுனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர் எளிதில் கோப பட கூடியவர் ,2019 நவம்பர் மாதம் சபரீசனுடன் பிணக்கம் ஏற்பட்டு திமுகவை விட்டு வெளியேறினார்.

சுனில்,நீ போனால் என்ன என்று ஏட்டிக்குப் போட்டியாக 350 கோடி ரூபாய்க்கு பிரசாந்த் கிஷோரை திமுகவின் அரசியல் ஆலோசகராக நியமனம் செய்தார் சபரீசன் .இதுதான் நேரம் என்று சுனிலை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக   ஒப்பந்தம் செய்தது அதிமுக 

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் சூழ்ச்சிகளை தெரிந்து  முதல்வர் எடப்பாடி தக்க பதிலடி தந்தது இப்படித்தான், எங்கள் தேர்தல் அறிக்கையை  எப்படியோ திமுகவினர் தெரிந்து கொள்கிறார்கள் என்று எடப்பாடி சிரித்தபடியே சொன்னதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் , சுனில் என்கிற ஒரே மந்தையில் திசைமாறிய இரு ஆடுகளின் கதை உண்டு .

பிரசாந்த் கிஷோர் சுனில் என்ற இரு தேர்தல் மந்திரவாதிகளின் வெறித்தனமான விளையாட்டை தமிழகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது, தமிழகத்தில் யார் வெற்றி பெற போகிறார்கள் அதிமுகவா திமுகவா என்ற கேள்விகளை போன்றே சுனிலா? பிரசாந்த் கிஷோரா என்ற மற்றொரு கேள்வியும் கூடவே எழுப்ப பட்டு வருகின்றது.