தமிழக தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட பரபரப்பு தொடங்கியுள்ளது, திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி ஊடகங்களில் பணிபுரிந்த குணசேகரன், செந்தில், ஜீவசகாப்தம் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது, அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து மூவரும் தாங்கள் பணிபுரிந்த தொலைக்காட்சி ஊடகத்தில் இருந்து வெளியேறினர்.
அதை தொடர்ந்து குணசேகரன் சன் நியூஸில் இணைய செந்தில், ஜீவ சகாப்தம் ஆகியோர் தனியாக யூடுப் சேனல் தொடங்கினர்.இது ஒருபுறம் இருக்க தன்னை நடுநிலை பத்திரிகையாளராக காட்டி கொள்ள முயன்ற செந்தில், தற்போது சிக்கி சிதைந்து வருகிறார், நான் தமிழன், தமிழ் தேசியம் பேசக்கூடியவன் என செந்தில் பேசியதை நினைவு கூர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் செந்திலை கலாய்த்து வந்தனர்.
செந்தில்னா சாப்டியானா என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், திமுக குறித்து செந்தில் எந்த விமர்சனங்களும் வைக்காத நிலையில் அவரை கடுமையாக கிண்டல் செய்ய, கடும் கோபத்தில் செந்திலும் பதிலடி வீடியோ வெளியிட்டார், மேலும் நான் நியாமான நடுநிலையான ஊடகத்துறையை சேர்ந்தவன் எனவும் விளக்கம் கொடுத்தார்.
திமுக ஆயிரம் விளக்கு வேட்பாளர் எழிலனை நேர்காணல் செய்யவே அங்கு சென்றதாக செந்தில் குறிப்பிட்டு இருந்தார், இந்த நிலையில் விரைவில் செந்தில் குறித்து பல்வேறு திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாக போகிறதாம், இதற்கு முன்னர் மதன் ரவிச்சந்திரன் தனது சேனலில் திமுகவிடம் பணம் பெற்ற பிரபல ஊடகவியலாளர் என வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக விரைவில் வீடியோ ஒன்று வெளியாக இருப்பதாகவும் அதில் பணம் பெற்ற பல்வேறு நபர்களின் பெயர்களும் வெளியாகலாம் என கூறப்படுகிறது, அந்த வீடியோ உண்மையான ஆதரங்களில் அடிப்படையில் வெளியாகும் பட்சத்தில் பல்வேறு பத்திரிகையாளர்களின் உண்மை முகம் வெளி உலகிற்கு தெரியும் என்பதால் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அதில் தமிழ் கேள்வி செந்திலும் இருக்கலாம் என கூறப்படுகிறது, ஏற்கனவே பாஜக, அதிமுக, பாமக. நாம் தமிழர் போன்ற கட்சியை சேர்ந்தவர்கள் செந்திலை திமுக ஆதரவாளர் என கூறிவரும் நிலையில் வீடியோ ஆதாரம் வெளியானால் அது நிச்சயம் கடும் பரபரப்பை உண்டாக்க போவது நிச்சயம்.