குஜராத்துல 156 இடங்கள ஜெயிச்ச பாஜக 7வது மொறையா ஆட்சி அமைச்சியிருக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னம் கொஞ்ச காலமே இருக்குற நிலையில பாஜகவோட இந்த விஸ்வரூப வெற்றி எதிர்க்கட்சிகளை கிடுநடுங்க வச்சியிருக்கு. ஒண்ணா, இரண்டா 27வது வருஷமா பாஜக குஜராத்துல ஆட்சியைப் பிடிச்சியிருக்குன்னா சும்மாவா? ஏதோ பண்றாங்கப்பா... அப்படின்னு எதிர்க்கட்சிக்காரங்களே மண்டைய பிச்சிக்கிட்டு இருக்காங்களாம். இந்த சமயத்துல பிரதமர் மோடி அனைத்து பாஜக மாநில தலைவர்களுக்கும் கொடுத்திருக்குற அதிரடி அசைன்மெண்ட் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள கதிகலங்க வச்சியிருக்கிறதா சொல்லப்படுது.
அடுத்த தேர்தல் கர்நாடகாவுல பிப்ரவரியில தானே அப்போ பாத்துக்கலாம் என கால் மேல் கால் போட்டு எதிர்க்கட்சிகள் சாவுகாசமாக அமர்திருக்க, பிரதமர் மோடி அதிரடியா களமிறங்க ஆரம்பிச்சியிருக்காரு. சமீபத்தில பாஜக குஜராத்துல இமாலய வெற்றி பெற்றதுக்கான பாராட்டு விழா டெல்லியில நடந்துச்சி, இதுல கலந்துக்கிட்ட பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் மாலை அணிவிச்சி மரியாதை செலுத்துனாங்க. இந்த கூட்டத்துல குஜராத் தேர்தல ஜெயிச்சதுக்கு சந்தோஷப்படுறத விட, இமாச்சல கோட்டை விட்டதுக்காக நிர்வாகிகள பிரதமர் மோடி மறைமுக பிரிச்சி மேய்ச்சியிருக்காரு. ஒருகட்டத்துல செம்ம சீரியஸா பேச ஆரம்பிச்ச பிரதமர், கூட்டத்தில் இருந்த குஜராத் பாஜக தலைவரும், எம்.பியுமான சி.ஆர்.பட்டேலை ஆஹா... ஓஹோ என புகழ்ந்து பேச ஆரம்பிச்சியிருக்காரு.
குஜராத் தேர்தல்ல ஜெயிக்க அவர் என்னென்ன மாதிரியான விஷயங்கள எல்லாம் செஞ்சாருன்னு லிஸ்ட் போட்டு பேச ஆரம்பிச்சியிருக்காரு. பூத் அளவில களத்தில் இறங்கி ஆய்வு பண்ணி கட்டமைப்பை மேலும் ஸ்ட்ராங் ஆக்குனது, வாக்காளர் பட்டியலின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு தேர்தல் பொறுப்பாளர் என்ற அமித் ஷா தேர்தல் வியூகத்தை குஜராத்தில் கொண்டு வந்ததையும் சுட்டிக்காட்டி பேசியிருக்காரு.
அத்தோடு இல்லாம குஜராத்துல பாஜக ஃபாலோப் பண்ண இந்த தேர்தல் முறைய எல்லா மாநிலத்துலையும் வரப்போற தேர்தல்ல அப்ளே பண்ணனுன்னு பிரதமர் மோடி ஸ்ட்ரிக்ட்டா உத்தரவு போட்டிருக்காராம். அப்புறம் அடுத்தடுத்து வரப்போற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்ப இருந்தே தயாராகுங்கன்னு அனைத்து மாநில தலைவர்களுக்கும் ஆர்டர் போட்டியிருக்காராம். குறிப்பா அடுத்த வருஷம் பிப்ரவரி மாசம் மேகலாயா, திரிபுரா, நாகலாந்திலும், மே மாதத்தில் கர்நாடகாவிலும், நவம்பர் மாதத்தில் மத்தியப்பிரதேசம், ஹரியானா, சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்குறதால எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,மாநில தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருக்காரு.
மோடி சொன்ன இந்த அட்வைஸின் படிதான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னோட சுற்றுப்பயணத்த திட்டமிட்டிருக்குறதா சொல்லப்படுது. தமிழகத்துல அடுத்த தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல்ன்னாலும், இப்பவே தமிழக பாஜக தீயா வேலைய ஆரம்பிச்சியிருக்குறது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வயிற்றில புளிகரைக்க ஆரம்பிச்சி இருக்குறதா செய்தி....