Cinema

அண்ணாமலை தெரிவித்த கருத்து தற்போது படு வைரல்...!

annamalai , vijay
annamalai , vijay

நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை கொடுத்த பதில் தற்போது வைரலாக தொடங்கி இருக்கிறது.சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் விஜய் காக்கா கழுகு கதை சொன்னார் கூடவே அப்பா மகன் கதையும் விஜய் சொல்ல தற்போது விஜய் உதயநிதியை குறிவைத்து தான் அப்பா மகன் கதை சொல்லி கலாய்த்து இருக்கிறார் என ஒருபக்கம் திமுகவினர் விஜயை சீண்டி வருகின்றனர்.


இது ஒருபுறம் என்றால் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை அரசு அழைத்ததன் பேரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை செல்ல சென்னை விமான நிலையம் வந்து இருந்தார் அப்போது நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் கொடுத்த அண்ணாமலையிடம் நடிகர் விஜய் 2026-ம் ஆண்டை குறிப்பிட்டு மையமாக கொண்டு சூசகமாக அரசியல் பேசி இருக்கிறார் இது குறித்து உங்கள் கருத்து என்ன  என கேட்க...!

அதற்கு அண்ணாமலை சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் சொன்னார் அண்ணா புதியவர்கள் அரசியலுக்கு வரணும், அப்போதான் அரசியல் மாற்றங்கள் இருக்கும் என நேரடியாக குறிப்பிட்டார். விஜய் அரசியல் வருகை குறித்து உதயநிதி சீமான் போன்றவர்கள் மலுப்பலான பதிலை கடந்த காலங்களில் தெரிவித்து இருந்த நிலையில் நேரடியான பதிலை அண்ணாமலை தெரிவித்து வரவேற்று இருப்பது தற்போது வைரலாக தொடங்கி இருக்கிறது.