Politics

வாக்கு கேட்டு சென்ற திமுக வேட்பாளருக்கே இந்த நிலை என்றால் வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின் நிலை என்ன? வீடியோ இணைப்பு

Dmk manifestos
Dmk manifestos

நாடாளுமன்ற தேர்தலின் போது மிக பெரிய வெற்றியை பதிவு செய்த திமுக கூட்டணி தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது, வழக்கமாக இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு வாக்குகள் உருவாவது வழக்கம்.


ஆனால் ஆட்சியில் இருக்கும் அதிமுகவை காட்டிலும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவிற்கு தற்போது வரை எதிர்ப்பு அலை இருப்பது திமுகவினரை கலக்கம் அடைய செய்துள்ளது, இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக என்ற பிரச்சாரம் ஒருபுறம் திமுகவிற்கு எதிர்ப்பு வாக்குக்குகளை உருவாக்கி கொண்டு இருக்க, மறுபுறம் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை தென் மாவட்டங்களில் திமுகவிற்கு எதிராக திரும்பியுள்ளது.

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 259 வது வாக்குறுதியாக ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர் BC, MBC, OC சமூகத்தில் திருமணம் செய்தால் 60 ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு பவுன் தங்கமும் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது, இந்த வாக்குறுதி இதுநாள் வரை திமுகவில் இருந்த தீவிர ஆதரவாளர்களை கூட வெளியேற செய்துள்ளது.

இந்நிலையில் வாக்கு கேட்டு சென்ற திமுக பிரமுகரை நிறுத்தி விரட்டி அடித்த இளைஞர்கள் நான் நேற்று வரை திமுகவில்தான் இருந்தேன் இது என்ன வாக்குறுதி நாங்கள் எங்கள் வீட்டு பெண்களை யாருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என ஸ்டாலின் முடிவு செய்கிறார் என கண்டித்து வேட்பாளரை ஓட ஓட விரட்டி அடித்தனர், பல இடங்களில் ஊர்களுக்குள் வாக்கு கேட்டு திமுகவினர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதோ திமுக வேட்பாளர் விரட்டி அடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள்... வாக்கு கேட்டு சென்ற வேட்பாளருக்கு இந்த நிலை என்றால் வாக்குறுதி கொடுத்த ஸ்டாலினின் நிலை என்ன ஆக போகிறதோ?