பிரபல யூடுபர் மதன் கௌரி இந்தியாவிற்கு ஆதரவாக வெளியிட்ட வீடியோவிற்கு எதிராக திமுக மற்றும் பாஜக எதிர்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வீடியோவை நீக்கி இருக்கிறார் மதன் கௌரி இந்த சூழலில் மதன் கௌரிக்கு எதிராக மிக பெரிய அரசியல் அழுத்தம் கொடுக்கபட்டது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.
இந்த ஆவணப்படத்தில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கு மோடி தான் காரணம் என்றும் இந்தியாவை பிளவுபடுத்தக்கூடியவராக நரேந்திர மோடி இருக்கிறார் என்று. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல ஊடகம் ஆதரமில்லாமல் தகவலை வெளியிட்டு இருந்தது.
இதனால் ஆவணப்படத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை செய்தது.ஆவணப்படம் குறித்து பிரபல யூடியுபர் மதன் கெளரி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசும்போது, “இந்தியாவின் இறையாண்மையை குலைக்க செய்யப்படும் சதி தான் இந்த ஆவணப்படம். 21 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பற்றி இப்போது ஏன் பேச வேண்டும். பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தான் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நடந்ததைப் பற்றி இங்கிலாந்து நாட்டு ஊடகம் ஏன் பேச வேண்டும்.” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.மதன் கௌரி வெளியிட்ட வீடியோ சாமானிய மக்களையும் சென்று அடைந்த சூழலில் மதனுக்கு பல்வேறு வகையிலும் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது, ஆளும் கட்சியின் நிதி நிர்வாகத்தை கவனிக்கும் ஒருவர் நேரடியாக தொடர்கொண்டு மதனை வீடியோவை நீக்க அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பிபிசி ஆவணப்படம் குறித்து தான் வெளியிட்ட வீடியோவிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மதன் கெளரி தெரிவித்ததுடன் அவர் வெளியிட்ட வீடியோவை நீக்கி இருக்கிறார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மோடி ப ஆவணப்படம் குறித்து நான் வெளியிட்ட வீடியோ என்னை பின்பற்றும் பலருக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் படித்தேன். தனிப்பட்ட முறையில் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பிபிசி ஆவணப்படம் குறித்து வெளியிட்ட வீடியோ அகற்றப்படும். நான் எதிர்காலத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மதன் பல இடங்களில் பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்கிறார் ஆனால் மத்தியில் ஆட்சி அதிகாரதில் இருந்தும் எங்குமே பாஜக அவருக்கு வீடியோவை நீக்க அழுத்தம் கொடுக்கவில்லை ஆனால் இந்த முறை இந்தியாவிற்கு ஆதரவாக ஒரே ஒரு வீடியோ பதிவிட்ட மதனுக்கு எதிராக இப்படிப்பட்ட அடக்க முறையை அவரது தொலைபேசியை தொடர்பு கொண்டு பேசியவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரமும் விரைவில் வெளியாக இருக்கிறதாம்.
மொத்தத்தில் இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கூட தமிழகத்தில் சுதந்திரமாக வலம் வரும் நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மதன் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பது பல்வேறு நபர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.