சமூக வலைத்தளத்தில் தமிழக பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் கொடுத்த பதில் தற்போது ஒட்டுமொத்த இணையத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துவரும் பாஜகவினர் சபாஷ் பேராசிரியரே இப்படி பதில் சொன்னால்தான் புரியும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாண்டேயுடன் நடைபெற்ற பட்ஜெட் விவாத்தில் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார். அரசியல் நிர்ணய சபை விவாத்தில், இந்தியாவை Unification of India என்று சொல்வதா அல்லது Intrgration of India என்று சொல்வதா என்று. அப்போது பாபா சாஹேப் அம்பேத்கர் சொல்கிறார்,
“இது இண்டக்ரேஷன் தான், யூனிஃபிகேஷன் இல்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிலப்பரப்பை இணைத்தால் யூனிஃபிகேஷன். ஜெர்மனியை யூனிஃபிகேஷன் என்பார்கள். ஏற்கனவே பண்பாட்டு ரீதியாக ஆன்மிக ரீதியாக ஒரே சிந்தனை கொண்ட இந்தியாவின் பகுதிகளை இணைப்பதை இண்டக்ரேஷன் என்று தான் சொல்ல வேண்டும், யூனிஃபிகேஷன் இல்லை என்று சொன்னவர் பாபா சாஹேப் அம்பேத்கர்.
அமெரிக்காவில் 51 மாநிலங்கள் தீர்மானம் போட்டு அமெரிக்காவை உருவாக்கினார்கள் (யூனிஃபிகேஷன்). இந்திய ‘தேசம்’ தீர்மானம் போட்டு ‘மாநிலங்களை’ உருவாக்கியிருக்கிறது. மேலிருந்து கீழாக வருகிறது. இதை ஒன்றிய அரசு என்று சொல்வது அபத்தம். (விடியல் வெளியிட்டிருப்பதை) புத்தகம் என்று சொல்லலாம் அல்லது யூனியன் ஆஃப் பேஜஸ் என்று சொல்லலாம்.
பக்கங்களின் ஒன்றியம் என்று சொல்லலாம். எனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லலாம் அல்லது உறுப்புகளின் ஒன்றியத்துக்கு சரியில்லை என்றும் சொல்லலாம். வீட்டை யூனியன் ஆஃப் ரூம்ஸ என்று சொல்லலாம். இம்மாதிரி அரசியல் அபத்தங்கள் வெட்ககரமானது. “ எனவும் விடாமல் வீம்பு பிடிக்கும் பலருக்கு புரியும் மொழியில் பதில் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ மத்திய அரசை ஒன்றிய அரசு என விமர்சனம் செய்யும் பலருக்கும் அதனை தொடங்கிவைத்த திமுகவிற்கும் கடும் பதிலடியாக அமைந்துள்ளது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.