24 special

உன்னால் முடியும் என்றால் என்னாலும் முடியும்.... ஒரே நாளில் அடுத்தடுத்த அதிரடி....!

Actor vijay and udhayanithi stalin
Actor vijay and udhayanithi stalin

தமிழக அரசியல் களம் மட்டுமின்றி சினிமா களமும் சூடாகி இருக்கிறது, ஒரு புறம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பது குறித்த செய்திகள் ஊடகங்களில் முன்னிலை பெற்று கொண்டு இருக்க திடீர் என விஜய் தனது ரசிகர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக ஊடகங்களுக்கு தகவல் வந்தது.


இதையடுத்து உதயநிதிக்கு இணையாக ஊடகங்களில் விஜய் ரசிகர்களை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றது, இந்த நிலையில் விஜயின் ரசிகர்கள் சந்திப்பு எதார்த்தமாக நடந்தது இல்லை என்றும் திட்டமிட்டு உதயநிதிக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் விஜய் தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார் என்று வெளிப்படையாக ஊடகவியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

துணிவு திரைப்படம் வெளியாகும் அன்றே வாரிசு திரைப்படமும் வெளியாகும் நிலையில் அதனை தள்ளிப்போட துணிவு திரைப்படத்தை விநியோகம் செய்யும் உதயநிதி தரப்பு அழுத்தம் கொடுப்பதாகவும் என்ன ஆனாலும் பரவாயில்லை டெல்லி வரை செல்லலாம் என முடிவு எடுத்து இருக்கிறாராம்.

இதன் தொடர்ச்சியாகதான் திடீர் என்று இன்று ரசிகர்களை சந்தித்து இருக்கிறார் விஜய் எனவும், சினிமா துறையில் எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் அரசியல் துறையில் என்னாலும் அழுத்தம் கொடுக்க முடியும் என விஜய் நேரடியாக சொல்லி இருப்பதாகவே கடந்த சில நாட்களாக விஜயின் நாகர்வுகளை கவனித்து வருபவர்கள் கூறுகிறார்கள்.

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதியை விமர்சனம் செய்து இருந்தார் அப்போது ஒரு கோடி ரெண்டு கோடி ரசிகர்கள் இருந்தாலும் உதயநிதியிடம் அடங்கி போகும் நிலைதான் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.அண்ணாமலை யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் விஜயை மனதில் வைத்துதான் கூறியதாக கூறப்படுகிறது...

இந்த நிலையில் தான் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் சூழலில் நேரடியாக விஜயும் களத்தில் இறங்கி இருக்கிறாராம்.  தொடர்ச்சியாக வாரிசு திரைப்படத்திற்கு அடக்கு முறை தொடர்ந்தால் தெலுங்கு திரை உலகை சேர்ந்த NTR எப்படி உள்துறை அமைச்சரை சந்தித்து மனமிட்டு பேசினாரோ அதே போன்ற முடிவுகளை எடுக்கவும் விஜய் தயாராகி இருப்பதாக ஏற்கனவே நமது சேனலில் செய்திகளை வெளியிட்டு இருந்தோம்.

அதனை உறுதி படுத்தும் விதமாக விஜய் இன்றைய தினத்தை தேர்வு செய்து அவரது ரசிகர்களை சந்தித்தது என்பது முழுக்க முழுக்க உதயநித்திக்கு உன்னால் சினிமா துறையில் எனக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றால் ரசிகர்கள் மூலம் என்னாலும் உனக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க முடியும் என்பதை விஜய் உதயநிதிக்கு தெளிவு படுத்தி இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் மற்றும் சினிமா பார்வையாளர்கள் கருது கின்றனர்.