24 special

தமிழக MP சீட்டு வைத்து தான் மோடி பிரதமராக வேண்டிய கட்டாயம் இல்ல.. அதிமுகவை ஓரங்கட்டி களத்தில் குதிக்கும் பாஜக!

Annamalai,edapadi
Annamalai,edapadi

தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன, திமுக கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றே அக்கட்சியின் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடக இருக்கிறது, இந்நிலையில் அதிமுகவை தலமையாக கொண்டு மெகா கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலை காட்டிலும் அதிக கட்சிகளை கூட்டணியில் சேர்ப்போம் என்றே மெகா கூட்டணி என்ற வாதத்தை முன்வைத்தனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதுமட்டும் இன்றி பாஜக எவ்வளவுதான் களத்தில் இப்போது தீவிரமாக இயங்கினாலும் சரியாக தேர்தலுக்கு 6 மாதம் முன்பு வேலை செய்து எளிதில் களத்தை எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த முறை போன்று 5 இடங்களை பெற்று கூட்டணியை உறுதி செய்ய பாஜக தமிழகத்தில் தயாராக இல்லை என தெளிவாக பொது கூட்டங்கள் மூலம் தெரியக்ப்படுத்தி இருக்கிறார்கள் குறைந்தது 15 தொகுதிகளில் போட்டியிடுவது  எனவும் அதில் உடன்பட்டால் கூட்டணி இல்லை என்றால் தனித்து போட்டியிட பாஜக முடிவு எடுத்து இருக்கிறதாம்.

பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றுதான் மோடி நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற நிலை பாஜகவிற்கு இல்லை எனவே இப்போது தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் என்ன என்பதை சோதிக்கும் தேர்தலாக 2024 தேர்தலை களத்தில் சந்திக்க பாஜக முடிவு எடுத்து இருக்கிறதாம் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா,கருணாநிதி என்ற இரண்டு ஆளுமைகள் இருந்த காலத்தில் கூட பாஜக கூட்டணி 15% அதிகமான வாக்குகளை பெற்றது.

இப்போது ஆட்சியில் திமுக இருக்கிறது ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை மோடி தான் பிரதமராக வருவார் என்ற ரீதியில் தேர்தலை சந்தித்தால் குறைந்தது 20% வாக்குகளை பெறலாம் என தமிழக பாஜக சார்பில் அதன் தேசிய தலைமையிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதை உளவு அமைப்புகள் மற்றும் தனியார் ஏஜென்சிகள் உறுதி படுத்தி இருக்கின்றனவாம், 2024-ல் குறைந்தது 20% வாக்குகளை பாஜக பெற்று விட்டால் 2026 தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கவும் கூட்டணி கணக்குகள் அமைக்கவும் உறுதுணையாக அமையும் என  பாஜக உறுதியாக கணக்கிட்டு இருக்கிறதாம்.

பாஜக தனித்து நின்று வாக்குகளை உறுதி செய்து விட்டால் இனி எந்த காலத்திலும் திமுகவிற்கு நேர் எதிரி பாஜக மட்டும்தான் என களத்தை எளிதாக மாற்றிவிடும், மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரம் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை தனித்து போயிட தயாராகுங்கள் என பேசி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணி உடைந்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும், நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக அதிக இடங்களை வெல்லும் என்ற பூச்சாண்டி எல்லாம் இங்கு காட்ட வேண்டாம் என தெளிவாக நெற்றி பொட்டில் அடித்தது போன்று தரவுகளுடன் பதில் கொடுக்கபட்டு இருக்கிறதாம்.குறைந்தது 15 தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்ற தகவல் இப்போது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி இருக்கிறது.