24 special

நம்ம தொகுதி இருக்குற இருப்புக்கு இது தேவையா...!வாண்டடாக வந்து சிக்கிய கனிமொழி...!

Kanimozhi, mkstalin
Kanimozhi, mkstalin

சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்தின் நடைபெற்ற சம்பவம் ஒன்று பல தரப்பினர் இடையே வன்மையாக கண்டிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளை கண்டுபிடித்து மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் அதன் நடைமுறைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது இருப்பினும் தமிழகத்தில் இந்த சம்பவத்திற்கு எதிராக பல போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. 


இந்த செயலை கண்டித்து மணிப்பூர் மாநில அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம் பி கனிமொழி மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் மாநிலத்தை ஆளும் பாஜக அரசை கண்டித்து பல கருத்துக்களை முன்வைத்தார். 

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த இப்படிப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானதை அடுத்து அம்மாநில முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார், அதோடு பிரதமர் நரேந்திர மோடியும் இது பற்றி செய்தியாளர்கள் முன்னிலையில் கடும் கோபத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கொந்தளித்து பேசி இருந்தார். ஆனால் அதை அனைத்தையும் மறந்து விட்டு அது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாமல் கனிமொழி முற்றிலுமாக பாஜக அரசின் மீது கண்டனங்களை வைத்துள்ளார்.  

இதற்கு என்ன காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் அலசியபொழுது இன்னும் சில தினங்களில் திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாவது பாகத்தை அண்ணாமலை வெளியிட உள்ளார் அது யார் யார் என்று சொத்துக்கள் யார் யார் பெயரில் உள்ளது பினாமியின் முழு விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்ற தகவல் தற்போது தான் வெளிவந்தது கடந்த முறை வெளியிட்ட சொத்து பட்டியலின் பாகம் ஒன்றிலும் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  இப்படி தன் சொத்துப்பட்டியல் வெளிவந்த காரணத்தினாலேயே பாஜக மீது கனிமொழி ஏக கோபத்தில் இருப்பதே காரணம் என கூறப்படுகிறது!

இதுமட்டுமல்லாமல் சொந்த தொகுதியில் எந்த வித நலத்திட்டங்களை மக்களுக்கு செய்யாமல் எங்கே கனிமொழி அடுத்த முறை ஓட்டு கேட்டு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று மக்கள் வெறிகொண்டு காத்திருக்க அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் பாஜகவை விமர்சிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி மீது கண்டனங்களை கனிமொழி முன்வைத்தது பாஜகவினருக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி கனிமொழி தமிழக மக்களை கண்டுகொள்ளாமல் மணிப்பூர் சம்பவத்திற்கு போராடுகிறேன் என்ற பெயரில் பிரதமரை விமர்சித்ததன் காரணமாக கனிமொழிக்கு வரும் தினங்களில் குறிப்பாக திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாம் பாகம் மற்றும் நடைபயணம் போன்ற தினங்களில் சிறப்பான பதிலடி பாஜக கொடுக்க தயாராகி வருவதாகவும் அதுவும் அவரது சொந்த தொகுதியிலேயே அவருக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழகத்திலே அவரின் கட்சியை சுற்றியே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்ற வேளையில் அதனை கண்டு கொள்ளாமல் வேறு மாநிலத்தின் பிரச்சனையை அம் மாநிலத்தின் முதல்வர் ஏன் நாட்டின் பிரதமரே முன்வந்து நடவடிக்கை எடுத்து வருகின்ற சமயத்தில் மணிப்பூர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக போராடுகிறேன் என்ற பெயரில் கனிமொழி வாண்டடாக வந்து சிக்கியது மட்டுமல்லாமல் திமுகவையும் சேர்த்து சிக்க வைத்துள்ளார் என பாஜகவினரின் மட்டுமல்லாது அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். அதுவும் அண்ணாமலை முதல்கட்ட யாத்திரையில் கனிமொழி சொந்த தொகுதியான தூத்துக்குடியில் இறங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.