24 special

அட்ராசக்க....! டெல்லியில் அண்ணாமலையை விசாரிப்பாங்கன்னு பார்த்தா... "மாஸ் அசைன்மென்ட்" கொடுத்திருக்காங்க... அப்செட்டில் அண்ணாமலை எதிர்ப்பாளர்கள்!

Jp natta ,annamalai
Jp natta ,annamalai

வழகத்திற்கு மாறாக  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் அதிக நாட்கள் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், பாஜக உயர்மட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதும் ஏன் என்ற தகவல் கசிந்துள்ளது.


தமிழக அரசியலில் இன்று பாஜக என்ற பெயரை உச்சரிக்காமல்  அரசியல் நிகழ்வுகளோ , பத்திரிக்கை மற்றும் சோசியல் மீடியாக்களிலோ செய்திகள் வெளிவருவதில்லை . ஒன்று பாஜகவை விமர்சனம் செய்து வெளிவருகிறது அல்லது ஆதரவு தெரிவித்து இரு வகையில் செய்திகள் வெளிவருகின்றன.

முதல்வரின் செய்திகள் முதல் பக்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவரின் செய்திகள் ஆறாம் பக்கத்திலும் வரும் ஆனால் இன்று அண்ணாமலையின் செய்தி முதல் பக்கத்திலும் முதல்வரின் செய்தி ஆறாம் பக்கத்திற்கு சென்றுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கூறும் அளவிற்கும், மேலும்  காலம் காலமாக எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு நையாண்டியாக விமர்சனம் செய்து பதில் சொல்லும், திமுகவில் பழம் தின்று கொட்டை போட்ட அமைச்சர்களான துரைமுருகன், கே என் நேரு போன்ற மூத்த அமைச்சர்களே , இன்று அண்ணாமலையால் பாஜக தமிழகத்தில் அசுரத்தனமாக,

திராவிட அரசியலுக்கு எமனாக வளர்ந்து நிற்கிறது என்று மேடைக்கு மேடை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும் அளவிற்கு தமிழக பாஜக என்ற நெருப்பை பட்டித் தொட்டி எங்கும் பற்ற வைத்திருக்கிறார் அண்ணாமலை என்றால் மிகை ஆகாது என்று பத்திரிகைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. 

அண்ணாமலை டெல்லியில் நடக்கும் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம், கட்சி பொதுக்கூட்டம் என்று பிசியாக இருந்தாலும், நடுவில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நட்டாவை சந்திப்பது தமிழகத்தில் ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்களில் பல வித யூகங்களை கிளப்பி பேசும் பொருளாகி இருக்கிறது. 

பல ஊடகங்கள் ஏற்கனவே அண்ணாமலை தமிழகத்தில் உள்ள சீனியர்களான இல கணேசன். எச்.  ராஜா, வானதி சீனிவாசன் எல் முருகன் போன்றவர்களை மதிப்பதில்லை, மூத்த தலைவர்களை ஓரம் கட்டுகிறார், தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் பாஜகவின் உட்கட்சி பிரச்சனைகளான காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்.  திருச்சி சூர்யா மற்றும் டெய்சி தங்கையா விவகாரம் போன்றவற்றை சீனியர்கள் டெல்லிக்கு புகாராக எழுதி அனுப்பி  பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் விசாரணை நடத்த உள்ளதாகவும் விரைவில் அண்ணாமலையை மாற்ற உள்ளதாகவும் தங்களுக்கு தோன்றியதை பொதுவெளியில் சொல்லி வந்தனர்.

அது மட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆயிரம் வாங்கிக் கொள் 2000 வாங்கிக் கொள்  என்று பத்திரிகையாளர்களை மதிக்காமலும், குரங்கு போல ஏன் தாவி கொண்டு வருகிறீர்கள் என்று அண்ணாமலை சொன்னதை விமர்சனம் வைத்து அண்ணாமலைக்கு எதிராக சிண்டு முடிந்து எழுதி வரும்  சூழ்நிலையில்

பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமல்லாது, தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலையின் டெல்லி பயணம் 2024 தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் பயணமாக இருக்கும் என்றும், அண்ணாமலை பத்திரிகையாளர்கள் நடந்து கொள்ளும் விதம் அண்ணாமலை குதர்க்கமாக கேள்வி கேட்பவர்களுக்கு தான் அப்படி பதில் சொல்கிறார், எல்லா பத்திரிக்கைகாரர்களையும் அண்ணா என்று மரியாதையாக அழைப்பதை ஏன் அவர்கள் சொல்வதில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர்? 

மேலும் தமிழகத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சந்திப்புகள் நடந்த பின் அண்ணாமலை இன்னும் வேகம் மற்றும் விவேகமாக செயல்பட்டுக் திமுகவின் ஊழல்களை பட்டியலிட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் மூலமாக மக்கள் முன் வைத்து வருகிறார்.

இதுவரை எந்த தமிழகத்தில் தலைவருக்கும் கொடுக்காத மரியாதையாக திண்டுக்கல்லுக்கு பாரதப் பிரதமர் மோடி வந்த பொழுது அண்ணாமலையை தன் காரில் ஏற்றி கொண்டு சென்றதையும்  குறிப்பிடுகிறார்கள். 

அண்ணாமலை சமீபத்தில் கொடுத்த பேட்டியில் 2024 தேர்தல் தன்னை தமிழகத்தில் பிஜேபியை  நிலை நிறுத்திக் கொள்ளவும், 2026 தேர்தலில் பிஜேபி தலைமையிலான ஆட்சியே இலக்கு என்று கூறியிருப்பதால்.

அண்ணாமலையின் டெல்லி பயணம் பல வித திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்று பல மூத்த பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். 2024 எலக்சனுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழ்நிலையில்,  தமிழகத்தில் அதிமுக  ஓபிஎஸ் இபிஎஸ்யின் பிளவு, அதிமுக ஒன்றிணையாமல் போனால் எந்தவிதமாக தேர்தலை சந்திப்பது?

அதிமுக இல்லாமல் பாஜக தேர்தலை சந்தித்தால் எந்த அளவு வெற்றி பெறும்? பிஜேபியில் எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு இருக்கும்?  பிஜேபி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பல்ஸ் என்னவாக தமிழகத்தில் இருக்கிறது என்று ஜே பி நட்டாவிவும்  அண்ணாமலையும் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 2024 தேர்தலை எவ்வாறு முன்னெடுத்து செல்வது, கூட்டணி வியூகங்கள் வகுப்பது, தேர்தல் நாராட்டிவ் செட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை அண்ணாமலை தனது கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை பெற  இருக்கிறாராம்.அண்ணாமலை தமிழகம் வந்தவுடன் எல்லாவற்றிற்கும் விடை கிடைத்து விடும் என்றும் கூறுகின்றனர். 

தமிழக வந்தவுடன்  அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்க போகிறது என்று? எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள், அரசியல் பார்வையாளர்கள் என பலரும் பலவாறு கருத்து தெரிவித்தாலும், வருகின்ற நாட்களில் தமிழகத்தில் பாஜகவின் நகர்வுகள் மற்றும் கூட்டணி கட்சிகள் உடனான அணுகுமுறை போன்றவையே டெல்லியில் அண்ணாமலையின் ரகசிய முகாம் குறித்த உண்மைகளை வெளி கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.