அரசியல் என்பது சாக்கடை என பலரும் கருத்து தெரிவித்து இருப்பார்கள் ஆனால் அரசியலில் இருந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் சாக்கடையான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் ஒரு சிலரே அதில் மிகவும் அருவருக்கதக்க வகையில் கருத்துக்களை பதிவிடும் சுந்தரவள்ளி இந்த முறை வலுவான பதிலடியை நடிகையும் வழக்கறிஞருமான கஸ்தூரியிடம் பெற்றுள்ளார்.
வழக்கம் போல் பாஜக மற்றும் பாஜக தலைவர்களை மோசமான வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார் சுந்தரவள்ளி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைநகர் டெல்லியில் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார் அதே நேரத்தில் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
அந்த வகையில் வேதம் பயிலும் சிறார் உடன் அமர்ந்து அண்ணாமலை உணவு உண்ணும் புகைப்படம் வெளியானது, அந்த புகைப்படத்தை பகிர்ந்த சுந்தரவள்ளி,அண்ணாமலை ஒரு பார்ப்பன அடியாள்..என்பதை உறுதி செய்யும் நிழல் படம்..உச்சி குடுமி பார்ப்பனர்களோடு உண்டக்கட்டி சோறு என விமர்சனம் செய்து இருந்தார் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில்,
எவ்வளவு ஜாதி வெறி இந்தம்மாவுக்கு. முன்பு போல பொய் சர்ச்சை போல இங்கு எதுவும் உருட்ட முடியவில்லை என்ற வயிற்றெரிச்சல். உண்மையான சமூக நீதியை பார்த்து கதறும் போலி பகுத்தறிவுவாதிக்கு சமத்துவ சோறு செரிக்காதுதான் என ஒரே போடாக போட்டார்.
ஓசி சோறு என ஏற்கனவே ஒருவருக்கு பெயர் உண்டான நிலையில் தற்போது கஸ்தூரி.. சுந்தரவள்ளிக்கு சமத்துவ சோறு செரிக்காது என புது அடைமொழியை கொடுத்துள்ளார் என பலரும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். சுந்தரவள்ளி போன்றொருக்கு எல்லாம் அறிவார்ந்த கருத்துக்களை கொடுக்க தேவையில்லை கஸ்தூரி போன்று லெப்ட் ஹாண்டில் டீல் செய்தால் போதும் என்கின்றனர் சுந்தரவள்ளியின் அரசியல் நாகரீக பேச்சை அறிந்தவர்கள்.
இது ஒருபுறம் என்றால் கடந்த அதிமுக ஆட்சியில் பாஜக எதிர்ப்பு போராளிகளாக அறியபட்ட பலர் இப்போது திமுக ஆட்சியில் சமூக வலைத்தளங்களில் மட்டுமே பாஜகவிற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர் அதிமுக ஆட்சியில் தங்களுக்கு இருந்த சுதந்திரம் கூட திமுக ஆட்சியில் நமக்கு இல்லாமல் போச்சே என பாஜக எதிர்ப்பு போராளிகள் பலர் வெளிப்படையாக புலம்பி வருகிறார்களாம்.
அப்படி சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவித்தால் கஸ்தூரி போன்றோர் அதே சமூக வலைத்தளத்தில் வலுவான பதிலடியை கொடுத்து விடுகிறார்கள் என என்ன செய்வது என தெரியாமல் சுந்தரவள்ளி போன்றோர் ஆழ்ந்த கவலையில் இருக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது.