24 special

குஜராத்தை தட்டித்தூக்கப்போகும் பாஜக; தலையில் அடித்துக் கொண்டு கதறும் காங்கிரஸ்!

Election
Election

குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியைத் தக்கவைக்கும் எனவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 182 சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 63.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.  இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 


இன்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தக்கோர், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர் வாக்களித்தனர். 

இன்று 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற தேர்தலில், 59 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 61 கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதில் பெரும்பாலானவை பாஜகவிற்கு ஆதரவாக வந்துள்ளது காங்கிரஸை தலையில் அடித்துக்கொண்டு கதறி வருகிறது. 

கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன? ரிபப்ளிக் - பி மார்க் நிறுவனத்தின் தேர்தலுக்கு கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் தேர்தலுக்கு கருத்துக் கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 42 இடங்களும், ஆம் ஆத்மிக்கு இரண்டு முதல் 10 இடங்களும் கிடைக்கும் என ரிபப்ளிக் கணித்துள்ளது. டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பாரதிய ஜனதாவிற்கு 131 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களும், ஆம் ஆத்மிக்கு ஆறு இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

சி-வேட்டர் கருத்துக்கணிப்பின் படி, பாஜகவிற்கு 128 முதல் 140 இடங்களும், காங்கிரஸுக்கு 31 முதல் 48 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 3 முதல் 11 இடங்களும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, பாஜகவிற்கு 117 முதல் 140 இடங்களும், காங்கிரஸ் கட்சி 34 முதல் 51 இடங்களையும், ஆம் ஆத்மி 5 முதல் 13 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா நியூஸ் கருத்துக் கணிப்பின் படி குஜராத்தில் பாஜகவிற்கு அதிகபட்சமாக 49% வாக்குகள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 முதல் 32 சதவிகித வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு அதிகபட்சமாக 19% வாக்குகளும் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.