Tamilnadu

வீடியோவை" நன்றாக கவனித்தால் ஒன்று புரிகிறது இந்து முன்னணி இளங்கோவன் தெரிவித்த தகவல்!

Ilangovan
Ilangovan

ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இளங்கோவன்  முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் அது பின்வருமாறு :-


வீடியோவை நன்றாக கவனித்தால் ஒன்று புரிகிறது. ஆரம்பம் முதலே அந்தப் பெண் வண்டியை நிறுத்துவது - அதிலிருந்து வீடியோ துவங்குகிறது.  பின்னர் அவளையே கேமரா தொடர்கிறது குறிப்பிட்ட இடத்திக்கு வந்தவுடன் அவள் அல்லாஹு அக்பர் என்று கத்துகிறார். அதைப் பார்த்துவிட்டு அந்தப் பக்கம் ஜெய்ஸ்ரீராம் சொல்லிக்கொண்டு இருந்த மாணவர்கள் அவளை நோக்கி வருகிறார்கள்.

அவர்களை தவிர்த்து விட்டு இந்தப் பெண் கேமராவை நோக்கி வந்து அல்லாஹு அக்பர் என்று சொல்லி அவள் பாட்டுக்கு நடந்து செல்கிறார்.

இதில் வீரம் எங்கே இருக்கிறது. தேவையில்லாமல் கலவரம் உண்டாக்குவதற்காகவ ஒரு நாடகத்தை நடத்தி விட்டு ஊடகங்கள் மூலமாக மீண்டும், மீண்டும் ஒரு கொந்தளிப்பான நிலையை வைத்திருக்கத்தான் இது உதவுமே தவிர வேறு எதற்கும் பிரயோசனம் இல்லை.

ஒரு பெரிய பிரச்சினை உருவாக வேண்டும். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதை வைத்து ஒரு கலவரம் உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு தேர்ந்தெடுக்கப்பட்ட கேமரா கண்கள் மூலமாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. வழக்கம்போல இது எல்லாம் தெரியாமல் பசங்க அவர்கள் பாட்டுக்கு கோஷமிட்டுக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.  

எத்தனையோ பேர் சினிமாக்களைப் பற்றி விதவிதமாக இங்கே எழுதுகிறார்கள்.  இந்த நாடகத்தின் காட்சியமைப்பும் கேமரா கோணங்களும் நமக்கே சுலபமாக புரிகிறது.

புரியாதபடி இருந்துக்கொண்டு அந்த மாணவர்களை விமர்சிப்பவர்களை இந்த நாடகத்தில் பங்கு கொள்பவர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

பிரச்சனையின் ஆரம்பமும் முடிவும், ஒன்றுதான். கல்வி நிலையங்களில் சீருடைக்குத்தான் முக்கியத்துவம்.   அதனை ஏற்றுக்கொண்டு படிப்பதற்கு தயாராக இருந்தால் படிக்கலாம்.  இல்லை என்றால் உங்களுக்குப் பிடித்தமான உடையை எங்கே அனுமதிக்கிறார்களோ அங்கே போய் படிக்கலாம்.

ஒரு பக்கம் கிறிஸ்துவர்கள் கல்வி நிலையங்கள் நடத்தி அதில் வரும் மாணவர்களுக்கு தங்கள் மதப் பிரச்சாரம் செய்கிறார்கள்.   மற்றொரு பக்கம் பொதுவான கல்வி நிலையங்களில் தங்கள் மத அடையாளங்களை தீவிரமாக இஸ்லாமியர்கள்  திணிக்கிறார்கள்.

இதற்கு நடுவே அச்சத்தோடு நான் இந்து என்று வெளியே சொன்னாலே அவன் பயங்கரவாதியாகவும், மதவாதியாகவும்  அடையாளமிடப்பட்டு மிகத் தீவிரமாக புனையப்பட்ட கருத்துக்களால் இழிவு  படுத்தப்படுகிறார்கள் எனவும் வேதனை தெரிவித்துள்ளார் இளங்கோவன்.

More watch videos