இசைஞானி இளையராஜாவிற்கு பல்வேறு விருதுகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி கவுரவித்த நிலையில் தற்போது மேலும் ஒரு வைரமாக மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் இளையராஜா.
இந்த சூழலில் ஒருபக்கம் இளையராஜாவிற்கு பிரதமர் தொடங்கி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், இது ஒருபக்கம் என்றால் பாஜகவிற்கு ஆதரவாக இளையராஜா செயல்படுவதாக கூறி அவருக்கு பதவி வழங்கப்பட்டு வருவதாக சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் தற்போது இளையராஜா இப்போது இல்லை எப்போதுமே அவர் தெய்வீகவாதி மற்றும் தேசியவாதி என்று பல்வேறு வீடீயோக்களை அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர், அதில் ஒன்றுதான் இளையராஜா பெரியார் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இசையமைக்க மறுத்து விட்டார் என்று ஒருவர் பேட்டி அளிக்கும் வீடியோ.
அதில் பெரியார் குறித்த திரைப்படத்திற்கு நாங்கள் இசையமைக்க கோரி இளையராஜாவை அணுகியபோது, நான் கடவுள் நம்பிக்கை உரியவன், பெரியார் நாத்திகவாதி அவர் படத்திற்கு இசை அமைக்க முடியாது என கூறிவிட்டார் என அந்த நபர் கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
இளையராஜா எப்போதும் கொள்கைவாதி அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அது குறித்து பேசவே மாட்டார், பிடித்தால் வெளிப்படையாக கூறிவிடுவார் என பலரும் இந்த வீடியோ காட்சியை பகிர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர், மொத்தத்தில் இளையராஜா தமிழ்நாட்டின் ராஜாதான்.
தற்போது பல பெரியாரிஸ்ட்கள் இளையராஜா பெரியார் திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்து விட்டவர் என தங்கள் ஆதங்கத்தை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.