Tamilnadu

அழுத்தம் கொடுத்த திமுக சவால் விட்டு செய்து காட்டிய பாஜக சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்த அதிரடி!

Velu nachiyar bjp function
Velu nachiyar bjp function

சிவகங்கை மாவட்டத்தில் வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கொடி மரம் நடுவதில் திமுக பல்வேறு அழுத்தம் கொடுத்த நிலையில் முடிந்ததை பாருங்கள் எங்கள் மாநில தலைவர் வருகிறார் நாங்கள் மத்திய அரசு,மத்திய அரசு சார்பில் ராணி வேலுநாச்சியாருக்கு புகழ் சேர்ப்போம் என அதிரடியாக சொல்லியது மட்டுமல்ல செய்தும் காட்டியுள்ளார் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பில் சக்தி.ராணி வேலு நாச்சியாருக்கு பிறந்தநாள் விழா கடந்த 3 -ம் தேதி நடைபெற்றது இதில் மாநில அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொள்வதற்காக திமுகவினர் திமுக கொடியை நட திட்டமிட்டனர், அதே நேரத்தில் மத்திய அரசு சார்பில் தங்கள் புகழ் வணக்கத்தை செலுத்த திட்டமிட்ட பாஜக கொடி கம்பம் நட திட்டமிட்டு செயல்பட்டது ஆனால் காவல்துறை தரப்பில் பாஜக கொடி கம்பம் நட எதிர்ப்பு எழுந்ததாகவும்.


ஆனால் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் பெரியகருப்பன் அரசு சார்பில் வருகிறார் என்றால் டெல்லியில் இருந்து எங்கள் தலைவர்கள் மத்திய அரசு சார்பில் வருகிறார்கள் என அத்தனை அத்தனை தடைகளையும் தாண்டி குறிப்பாக எங்கே பாஜக கொடியை பறக்க விட்டு காட்டுங்கள் என சவால் விட்டவர்களுக்கு போட்டியாக திமுக கொடி கம்பங்களுக்கு இணையாக பாஜக கொடியை பறக்க விட்டு ஆளும் கட்சியினர் சாவலை முறியடித்து இருக்கிறார் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்தி.


இந்த புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் அங்கு நடந்த சம்பவம் குறித்து அறியாமல் திமுக பாஜக கூட்டணி என தவறான தகவலை பரப்பி வருவதாகவும் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர் சிவகங்கை மாவட்ட பாஜகவினர். ஆளும் கட்சியை எதிர்த்து மாவட்ட ரீதியாக செயல்படுவது என்பது கட்சியின் கட்டமைப்பு வலுவடைந்து வருவதை காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், கலை கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம், பா.ஜ., மாவட்ட தலைவர் மேப்பல் சத்தி, முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா, எம்.எல்.ஏ., சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.