Tamilnadu

பாஜக மாநில தலைவர் கைது உச்சக்கட்ட பதற்றத்தில் தெலுங்கானா ஆளுநர் விரைவு !

Bjp telugana
Bjp telugana

பாஜக மாநில தலைவர் கைது செய்யப்பட்ட சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பி கள் ஆகியோர் தெலுங்கானா மாநிலத்தை தவிர்த்து வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்யக் கோரி, பாஜக மாநில தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.


இந்த உண்ணாவிரத போராட்டம் அனுமதி பெறாமல் நடந்ததாகவும், கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாகவும் கூறி, நேற்று முன்தினம் இரவு சஞ்சயை போலீசார் கைது செய்தனர். ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களைப் பணியிட மாற்றம் செய்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கரீம்நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பண்டி சஞ்சய் குமாா் தலைமையில் போராட்டம் நடத்த பாஜகவினா் திட்டமிட்டனா். அதற்காக, பாஜக அலுவலகத்தில் ஏராளமான பாஜக தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு குவிந்தனா்.

அப்போது அங்கு வந்த போலீஸாா், கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு எதிராக ஒன்று கூடிய குற்றச்சாட்டின் பேரில், பண்டி சஞ்சய் குமாரை கைது செய்தனா். அப்போது, போலீஸாருக்கும் பாஜக தொண்டா்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பண்டி சஞ்சய் குமாா் மீது பேரிடா் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் குற்றத்துக்காகப் பிணையில் வெளிவர முடியாத (பிரிவு 333) பிரிவின் கீழும் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், உள்ளூா் நீதிமன்றத்தில் அவரை திங்கள்கிழமை பிற்பகலில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரை சிறையில் அடைத்தனா்.

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக மிக பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது குறிப்பாக இடைதேர்தல்களில் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்று வருகிறது, இந்தசூழலில் நேரடியாக இரு தரப்பிற்கும் இடையே வார்த்தை மோதல்கள் வெடித்து வருகின்றன, இந்த சூழலில்தான் பண்டி சஞ்சயை கைது செய்து அவரை சிறையில் அடைந்துள்ளது தெலுங்கனா அரசு. 

பண்டி சஞ்சய் கைது செய்யபட்ட சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது, வேறு மாநிலங்களில் ஆளும் டி ஆர் எஸ் கட்சியினர் கைது செய்யப்படலாம் என்பதால் பலரும் தெலுங்கானா மாநிலத்திற்கு திரும்பி வருகின்றனர், மேலும் தெலுங்கானா ஆளுநர் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றமான சூழல் நிலவுகிறது.