கரூரில் கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேரி இருக்கிறது, குறிப்பாக கரூர் அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் பணிபுரியும் சோபா என்பவரது இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் செந்தில் பாலாஜியை முழுமையாக அசைத்து இருக்கிறது.
இதுவரை இப்படி ஒரு சோதனை தமிழகத்தில் எங்கும் நடைபெற்றது கிடையாது என பல முன்னாள் வருமான வரித்துறை அதிகாரிகளே நேரடியாக தெரிவித்து இருக்கும் சம்பவங்கள் திமுகவை அசைத்து பார்த்து இருக்கிறது.
கரூரில்அரசு ஒப்பந்ததாரராக இருப்பவர் எம்.சி.சங்கர் ஆனந்த், இவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை செய்தனர், அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ஆனந்த் அலுவலகத்தில் பணிபுரியும் சோபனா என்பவர் தான் பண பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய பரிவர்த்தனைகளை கவனித்து வந்தது தெரியவந்தது, இதையடுத்து கரூர், வடக்கு காந்திகிராமம் பகுதியில் உள்ள சோபனா இல்லத்தில் நேரடியாக சென்று சோதனை நடத்தினர், தொடர்ச்சியாக 6 நாட்கள் சோபனா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் நேற்றைய தினம் சோதனை முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கைபற்றியிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 26 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடைபெற்ற சோதனையில் சோபனாவிடம் பலகட்ட விசாரணைகள் நடைபெற்றது.தற்போது அந்த சோதனையானது முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு அளித்து வந்த பாதுகாப்பையும் விலக்கிக் கொள்ளுமாறு, காவல்துறை உயர் அதிகாரிகளை வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இனங்க, பாதுகாப்பும் விளக்கிக் கொள்ளப்பட்டது.
சோபனா தரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அரசு ஒப்பந்தம் மூலம் கைமாறபட்ட பணம் எவ்வளவு, யார் யாருக்கு எவ்வளவு பணம் சென்றது, இன்னும் யாரெல்லாம் இதில் தொடர்பில் இருக்கிறார்கள் என பலகட்ட தகவல்கள் கிடைத்து இருக்கிறதாம்.இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே செயின் முறையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று இருக்கிறது, கரூரில் நடைபெற்ற சோதனையில் 600 மேற்பட்ட நபர்கள், அலுவலக பியூன் வீட்டில் கூட சோதனை நடைபெற்று இருப்பது உண்மையில் மிக பெரிய பண பரிவர்த்தனை பினாமி சொத்துக்கள் போன்றவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் மீட்டு எடுத்து இருப்பதாகவும்.
விரைவில் பல முக்கிய பிரபலங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி உள்ளிட்ட பலர் சிறை சென்றாலும் ஆச்சர்யம் இல்லை என அடித்து கூறுகின்றனர் வருமான வரித்துறை சோதனை பற்றிய தகவல்களை அறிந்தவர்கள். மொத்தத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி 60 மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் பலர் மிக பெரிய சிக்கலில் சிக்கி இருப்பது கண் கூடாக தெரியவந்து இருக்கிறது.