24 special

திருமாவளவன் இனியும் திமுக கூட்டணியில் இருப்பாரா என்று சந்தேகம் தான்...?

Thirumavalavan, udhayanithi stalin
Thirumavalavan, udhayanithi stalin

திருமாவளவனுக்கு கர்நாடகாவில் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்ற  வேதனையில் இருந்து சிறுத்தைகள் மீழ்வதற்கு முன்னரே, தற்போது தமிழகத்தில் அதிலும் உதயநிதி கண்ணெதிரே திருமாவளவனுக்கு அரங்கேறிய சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கண்ணீர் விட செய்துள்ளது.


திருமண நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் நேரடியாக சென்று மணமக்களை வாழ்த்தி பூங்கொத்து கொடுத்து அருகில் புகைப்படம் எடுக்க நின்று இருந்தார், அப்போது மணமகன் அருகில் வந்து திருமாவளவனிடம் சில வார்த்தைகள் பேசினார், இதற்கு இடையில் திடீர் என்று மணமகனை அழைத்து நேரடியாக ஆ.ராசா உதயநிதி வருகிறார் வா என சைகை காட்டியதுடன், திருமாவளவன் கொடுத்த பூங்கொத்தை பறித்து பின்னால் கொடுத்தார்.

இது அருகில் நின்ற திருமாவளவனை அதிர செய்தது, உதயநிதி மணமக்களை வாழ்த்தும் வரை திருமாவளவன் ஓரமாக நின்றார். இந்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து பலரும்,இதுதான் திருமாவளவனுக்கு முன்னாள் அமைச்சர் கொடுக்கும் மரியாதையா? வார்த்தைக்கு வார்த்தை திராவிட மாடல் சமூக நீதி என பேசும் திமுகவினர், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு தலைவருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவிஏற்பு நிகழ்ச்சிக்கு சென்ற திருமாவளவனை ஏதோ அடையாளம் தெரியாத தலைவர் போல் காங்கிரஸ் தலைவர்கள் நடத்தியதே பெரும் விவாத பொருளாக மாறி இருந்த நிலையில் தற்போது திமுகவினரும் தமிழகத்தில் வைத்தே திருமாவளவனை ஓரம் கட்டிய சம்பவம் விசிகவினரை கதற செய்துள்ளது.

இனியும் கூட்டணியில் இருக்கலாமா என சிறுத்தைகள் கேள்வி எழுப்பி வருகின்றனர், சனாதான சக்தி பாஜகவை வீழ்த்துவோம் என கிளம்பிய திருமா இப்படி உதயநிதி வரும் நேரத்திற்கு நிற்க வைத்த சம்பவம் கடும் புகைசலை உண்டாக்கி இருக்கிறது.

திருமாவளவன் இதைப்பற்றியெல்லாம் கவலை படும் நபர் இல்லை அவருக்கு தேர்தல் அரசியல் முக்கியம் என்பதால் திமுக கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்பே இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.