கடந்த அதிமுக ஆட்சியில் அவ்வப்போது புரட்சி பேசி சமூக வலைதளங்களில் போராளியாக வளம் வந்த சித்தார்த் எங்கே என சமூக வலைதளத்தில் எழுந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் போராளிகளுக்கு பஞ்சமிருக்காது, முக்கிய போராளியாக சித்தார்த் வலம் வந்தார். அநேக தருணங்களில் அரசுக்கு எதிராக கருத்து கூறுவதை தலையாய கடமையாக செய்துவந்தார். அதில் இரண்டு முக்கிய சம்பவங்களாக, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா விவகாரம், மதுரை விமான நிலைய விவகாரத்தை கூறலாம்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
"எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று தனது ட்வீட்டில் சாய்னா தெரிவித்திருந்தார். சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், "இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று தெனாவெட்டாக தெரிவித்தார். இதில் இறகுப்பந்தின் ஆங்கில வார்த்தையான ஷட்டல் கார்க் என்பதை குறிக்க சித்தார்த் ''Subtle Cock" என்று ஆபாசமாக குறிப்பிட்டிருந்தார். இதற்க்கு எதிர்ப்பு கிளம்பியதால் பின்னாளில் மன்னிப்பு கேட்டார்.
மற்றொரு சம்பவமாக சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரிடம் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் ஹிந்தியில் பேசி 20 நிமிடங்கள் துன்புறுத்தியதாக சர்ச்சையை ஏற்படுத்தி அதில் போராளியாக பார்த்தார். சில மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர்களுடன் மதுரை விமான சென்றதாக கூறி தனது சமூக வலைதள பதிவில் " சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். அவர்கள் என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் ஹிந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஹிந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது 'இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்' என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்"என அவர் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி ஹிந்திக்கு எதிராக போராளியாக பார்த்தார்.
ஆனால் விமான நிலையத்தில் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் விளக்கம் அளிக்கையில், சித்தார்த் சென்னை செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையம் வந்தார். சித்தார்த்திடம் முகக்கவசத்தை அகற்றுமாறும் ஐடி கார்டு காட்டுமாறும் கேட்கப்பட்டது. சித்தார்த்தின் சோதனை நடந்த போது பணியில் இருந்தது தமிழகத்தை சேர்ந்த பெண் வீரர்தான் பணியில் இருந்தார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழில்தான் அந்த பெண் பாதுகாப்பு வீரர் பேசினார். இந்தியில் பேசவில்லை' எனக்கூறி சித்தார்த்தின் உள்நோக்கத்தை முறியடித்தார்.
இப்படி சமயம் கிடைக்கும்போதெல்லாம் அரசியல் கருத்துக்கள் பேசி தன்னை ஒரு போராளியாக கட்டிக்கொண்ட சித்தார்த் கடந்த சில மாதமாக அதுவும் அதுவும் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அமைதியானார். அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்தது. தற்பொழுது இந்த அமைதிக்கு பின்னால் உள்ள காரணத்தை விளக்கியுள்ளார் சித்தார்த். கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள படம் ‘டக்கர்’. இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் பேசியதாவது: "எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. ’டக்கர்’ என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள்' என படத்தை பற்றி கூறினார்.
பின்னர் அவர் பேசும்போது, 'முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தேன். இப்போது என்னை நம்பி இவ்வளவு படங்கள், தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகி விட்டேன்' என கூறினார். இப்படி தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என நான் அமைதியாகிவிட்டேன் என சித்தார்த் கூறியது சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது.