24 special

திமுகவின் அடுத்த உருட்டு வெளியானது...!

mk stalin
mk stalin

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் சேருவதற்கு தகுதியான பயனாளிகளை வருவாய்த்துறையும் மகளிர் மேம்பாட்டுக்கழகமும் ஆய்வு செய்து வருகிறதாம். விரைவில் இந்த பணிகள் முடிவடைய இருக்கிறதாம். தகுதியான இறுதி பட்டியலையும் திமுக அரசு அறிவிக்க இருக்கிறதாம்... அதாவது தகுதியான இறுதி பட்டியலை....


2021 சட்டமன்ற தேர்தலின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது .திமுக அறிவித்த வாக்குறுதிகளில் இந்த வாக்குறுதி மக்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை பெற்றது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை , ஒருவேளை இடத்தேர்தல் வரலாம் அதற்கு இந்த அறிக்கையை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துவிடலாம் என்று இருந்தார்கள் போல .

இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், உயர் மட்ட அதிகாரிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தினாராம், பொருளாதார ஆலோசனை குழுவுடனும் கலந்து பேசினார். குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டே செயல்படுத்த முடிவு செய்தாராம்..அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ,இந்த திட்டத்தில் யாருக்கு மாதம் தோறும் ஆயிரம் கிடைக்கும் என்ற குழப்பம் மக்களிடையே எழுந்திருக்கிறது, மகளிர் மேம்பாட்டு கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ள அமைப்புகள் மூலம் தமிழகத்தில் வறுமை கோட்டில் உள்ள ஏழைகள் எத்தனை பேர் உள்ளனர் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாம் .... 

அதனால் சொந்த வீடு இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் குடும்பத்தலைவிகளின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதாம், நிலையான வருமானம் இன்றி அன்றாட கூலி வேலை செய்யும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர்? கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம், அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இதில் கணவர் மார்களின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுக்கப்பட உள்ளதாம். இந்த பட்டியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் மாதம் ரூ.15000 அதிகமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கு இந்த உதவித்தொகை கிடைக்காதாம் ,இந்த திட்டத்தில் சேருவதற்கு தகுதியான பயனாளிகளை வருவாய்த்துறையும் மகளிர் மேம்பாட்டுக்கழகமும் ஆய்வு செய்து வருகிறதாம், தகுதியான இறுதி பட்டியல் விரைவில் தயாராகிவிடுமாம்....

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் இருந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் திருப்பி தருவோம் என்று சொல்லி , இப்போவே உங்களிடம் நகை இருந்தால் அடகு வையுங்கள் என்று வீதிக்கு வீதி பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தப்பின், தகுதியுடையவர்களுக்கு மட்டும் தான் நடைக்கடன் தள்ளுபடிஎன்று அறிவித்தது திமுக அரசு....இதில் பல பேர் வீட்டில் சும்மா இருந்த நகையை அடகு வைத்து இப்போது திருப்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்...

அந்த வரிசையில் தற்போது இந்த 1000 ரூபாய் திட்டமும் இணைந்திருக்கிறது.... முதலில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்று அறிவித்துவிட்டு தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மட்டும் தான் இந்த உதவி தொகை என்று அறிவிக்க இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் .... ஏமார தயாராக இருப்பவர்களை ஏமாற்றுவது ஜனநாயகம் தானே..