Tamilnadu

பத்திரிக்கை துறையை தெரியும் முதல் பேட்டியில் அதிர வைத்த ஆளுநர் கலக்கத்தில் நெறியாளர்கள் ...!

Governor Rn ravi
Governor Rn ravi

தமிழக ஆளுநராக இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார் ஆர்.என்.ரவி, புதிய ஆளுநருக்கு  தமிழக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார், பதவி ஏற்பு நிகழ்ச்சியில், முதல்வர், அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என முக்கிய கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர் ஆளுநர் ஆர்.என் ரவி செய்தியாளர்களிம் பேசுனார் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் பதிலளித்தார் . தமிழில் வணக்கம் என கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கிய அவர், தமிழ்நாட்டில் இருப்பது பெருமை அளிக்கிறது, இந்திய அளவில் தமிழர் நாகரிகம் பண்பாட்டிற்கு பெயர் போனது, என தெரிவித்தார்.

அரசியல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தமிழக மக்களுக்கும், தமிழக வளர்ச்சிக்கும் என்னால் முடிந்த நன்மைகளை செய்வேன். மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்று இருப்பது பெருமை அளிக்கிறது. தற்போது தமிழக அரசு நன்றாக செயல்படுகிறது ஆனால் தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கருத்து கூற சில காலம் தேவை.

தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க உள்ளேன். எனக்கு பத்திரிக்கை துறையில் சில அனுபவம் உள்ளதால் பத்திரிக்கையாளர்கள் குறித்து தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தார் ஆளுநர்.

இந்நிலையில் பத்திரிகை துறை குறித்து ஆளுநர் பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஊடகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது, சில ஆண்டுகளுக்கு முன்னர் மாரிதாஸ் சில முன்னணி பத்திரிகையயாளர்கள் மீது குற்றம் சுமத்தி பல்வேறு ஆதாரங்களை சம்மந்தப்பட்ட பத்திரிகை நிறுவனங்களுக்கு அளித்து இருந்தார், அந்த சம்பவம் பத்திரிகை துறையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த பலர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் ஊடகத்தினர் சிலர் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் திட்டமிட்டு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மக்கள் மத்தியில் தவறாக கொண்டு செல்வதாகவும், அது குறித்து மத்திய உள்துறை விசாரணை மேற்கொள்ளவேண்டும் என பல புகார்கள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனவே அது குறித்தும் அதன் பின்புலம் குறித்தும் தமிழக ஆளுநர் விசாரணை நடத்தலாம் என பரவும் தகவலால் முன்னணி ஊடகத்தின் தலைமை பொறுப்பில் இருக்கின்ற நெறியாளர்கள் கடும் கலக்கத்தில் உள்ளனராம். ஆளுநர் முன்பு உளவு துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் பேட்டியை பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.