புதுதில்லி : MOD (மினிஸ்ட்ரி ஆப் டிபென்ஸ்) கடந்த 2020ல் IAFகாக அஸ்ட்ரா எம்கே 1 ஏவுகணை 50 அலகுகளை வழங்கியிருந்தது. தற்போது கடற்படை மற்றும் விமானப்படையில் இந்த ரக ஏவுகணைகளை அதிகரிக்க MOD முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஏவுகணையை 250 அலகுகள் வாங்க அனுமதி அளித்துள்ளது.
இந்த அஸ்திரா எம்கே 1 விசுவல் ரேஞ்ச் ஏர் டு ஏர் ஏவுகணைகள் ஏற்கனவே பயன்பாட்டில் சிறந்துவிளங்குகிறது. மேலும் இந்திய கடற்படையின் இரன்டு பிரிவுகளிலும் SU-30MKI ரகம் செயல்பாட்டில் முன்னணியில் இருந்துவருகிறது. இதனால் இதன் உட்கொள்ளலை அதிகப்படுத்த அஸ்ட்ரா ஏவுகணைகளை அதில் இணைக்க MOD மற்றும் இந்திய விமானப்படை விரும்புகிறது.
அடுத்ததாக மிக் 29 UPG ரகங்களில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான்-விமான ஏவுகணை திட்டங்களை செய்லபடுத்த உள்ள MOD 2023ல் AESA சீகருடன் அஸ்ட்ரா ரக ஏவுகணையை மேம்படுத்தி பயன்டுத்த உள்ளது. அதையடுத்தே வருடந்தோறும் எம்கே 1 அஸ்ட்ரா 100 அலகுகள் வாங்கப்படும் என MOD தெரிவித்துள்ளது.
HAL நிறுவனத்துடன் இணைந்து இந்திய விமானப்படை நான்கு SU 30MKI ஸ்க்வாட்ரான்களை இயக்கி பரிசோதனைப்பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்த ஸ்க்வாட்ரான்கள் அடுத்த 2023 மார்ச்சிற்குள் அஸ்ட்ரா எம்கே 1 BVRAAM களுடன் பொருத்தப்பட உள்ளது.எல்.சி.ஏ தேஜாஸ் எம்கே 1ஜெட்விமானத்தில் இருந்து அஸ்ட்ரா எம்கே தனது கேப்டிவ் பிளைட் ட்ரையல்களை நீண்டநாட்களுக்கு முன்னரே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
வான்வெளிப்பாதுகாப்பில் விமானப்படையின் சிறந்த மற்றொரு மைல்கல்லாக இந்த அஸ்ட்ரா ஏவுகணைகள் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்தியா சமீபவருடங்களாக பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சுயசார்பு கொள்கையின் அடிப்படையில் மிக வேகமாக முன்னேற்றம் கண்டுவருவது உலகநாடுகளால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.