2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யபட்டது, இந்தியாவில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் உட்பட அனைவரது கவனத்தையும் பெற்றது, இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முக்கியமான அறிவிப்பினை பட்டியலிட்டுள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.
அது பின்வருமாறு :-இந்தியாவினை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் இரு முக்கிய விஷயங்கள் பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ளன முதலாவது 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகும் என்பது இது மிகபெரிய தொழில்வாய்ப்பையும் நவீன வசதிகளையும் இங்கே கொண்டுவரும், உலகில் தென்கொரியா சமீபத்தில் அமெரிக்கா என மிக சில நாடுகளே இந்த வசதியினை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
உலக அரங்கில் இந்தியா சற்றும் பின் தங்காமல் முன்னேறுகின்றது என்பதை பட்ஜெட்டில் அறிவித்திருக்கின்றார் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இதன்வழி ஐடி தொழில்நுட்பம் இணையவழியில் இந்தியாவின் பங்களிப்பு மிக வேகமாக தொடரும் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் விற்பனை சந்தையும் அதிகமாகும்
இன்னொரு விஷயம் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகமாகும் என்பது, இது இந்திய அரசு கிரிப்டோ கரன்சியினை அங்கீகரிக்கின்றது என அர்த்தமாகாது மாறாக இந்திய பணபரிவர்த்தனைக்கு பாதுகாப்பான டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தபடும் என்பதே.
இந்தியாவினை அடுத்த முன்னேறிய நிலைக்கு அழைத்து செல்ல, உலக பந்தயத்தில் இந்தியா சற்றும் பின் தங்காத வகையில் காரியங்களை செய்கின்றது மத்திய அரசு, தேசம் இனி புது பாய்ச்சலில் முன்னேறும் முன்பெல்லாம் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்தும் பொழுது அரசுகள் நிறைய யோசிக்கும் இதை செய்தால் வல்லரசுகள் என்ன பதிலடி கொடுக்கும்?
உள்ளூர் தொழிலதிபர்கள், உலக தொழிலதிபர்கள் என்ன செய்வார்கள் என கடும் யோசனையும் தயக்கமும் வரும், இந்த அரசு நாட்டுக்கு எது தேவையோ, எந்த காலகட்டத்தில் எதை நாட்டுக்கு செய்யவேண்டுமோ அதை சரியாக செய்கின்றது, இதுதான் சுதந்திரம் பெற்றதின் உண்மையான நோக்கம் அது சரியாக நிறைவேறி கொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
More Wacth Videos