இன்றைய உலகில் ஒரு பொருளை எந்த மூலையில் இருந்தாலும் உலகின் மற்றொரு மூலைகள் இருக்கும் பொருளை வாங்கிக் கொள்ளலாம் அதற்காக நாம் நம் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. ஏனென்றால் டிஜிட்டல் உலகில் அனைத்தும் மொபைல் போனிற்குள் அடங்கி விட்டது. கையில் பணம் இல்லாமல் ஒரு இடத்திற்கு சென்றால் கூட மொபைல் போன் இருந்தால் போதும் அனைத்தையும் எளிதாக பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு மனப்பான்மைக்கு பல இளைஞர்கள் குடும்பத் தலைவர்கள் குழந்தைகள் கூட வந்துவிட்டது! ஆனால் இவற்றில் எவ்வளவு வசதிகள் இருக்கிறதோ அதற்கு நிகரான ஆபத்துகளும் நிறைந்துள்ளது. அப்படி என்ன ஆபத்துகள் என்பதை குறிப்பிட்டு கூற வேண்டிய அவசியம் கூட கிடையாது ஏனென்றால் பல செய்திகளை தினமும் கேள்விப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம்.
உங்களது நண்பர் உங்களது உறவினர்களில் ஒருவரின் பெயரைக் கூறிக்கொண்டு அவருக்கு அவருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது அதற்காக நீங்கள் பணம் கொடுத்து உதவுங்கள் என்று மோசடி செய்து பணத்தைப் பறித்துள்ளனர். அதேபோல உங்களது கொரியர் ஒன்று கஸ்டமில் சிக்கி உள்ளது அதற்காக நீங்கள் இவ்வளவு பைன் தொகையை கட்ட வேண்டும் என்று அதிகாரி போல பேசி பண மோசடி செய்துள்ளனர். அதுமட்டுமின்றி உங்கள் பெயருக்கு ஒரு கொரியர் வந்துள்ளது. அதில் சட்டவிரோதமான பொருள்கள் உள்ளது. அதனால் விசாரணைக்கு நீங்கள் வரவேண்டும் என்று மிரட்டி பொதுமக்களை பயத்தில் ஆழ்த்தி அதற்குப் பிறகு இதில் நீங்கள் மாட்டக்கூடாது என்றால் இவ்வளவு தொகையை தர வேண்டும் என்று லஞ்சம் வாங்குவது போன்ற மோசடிகளும் இந்த உலகத்தில் தற்போது நடந்து கொண்டு தான் வருகிறது.
அதே சமயத்தில் யூடியூப் மற்றும் வாட்ஸ் அப் மூலமே பலர் வீட்டிலிருந்தபடியே தங்கள் தொழிலை நடத்தி வருகின்றனர். உதாரணமாக கவரிங் நகைகள், பெண்களுக்கான உடைகள், ஆண்களுக்கான உடைகள், குழந்தைகளுக்கான உடைகள், சமையலுக்கு வேண்டிய பாத்திரங்கள், அழகு சாதன பொருட்கள், பரிசு பொருட்கள் என இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூடியூப் மூலமாகவே பல ஆடர்களைப் பெற்று அதனை நேரடியாக அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்து வருமானம் பார்க்கிறார்கள். ஆனால் இதிலும் பல மோசடிகள் நடக்க ஆரம்பித்துள்ளது. அதாவது சில நாட்கள் ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை உபயோகப்படுத்தி விட்டு அதில் பெண்களை கவருகின்ற ஆடைகள் பற்றிய போட்டோக்களை பதிவிட்டு விட்டு பல ஆர்டர்களை பெண்களிடமிருந்து வாங்கிவிட்டு அதற்கு முதல் தொகையாக குறிப்பிட்ட பணத்தை முன்கூட்டிய செலுத்து சொல்லி பிறகு பணம் செலுத்தியவர்களின் அக்கவுண்டில் பிளாக் செய்து பண மோசடியில் செயல்பட்டு வருகிறது ஒரு கும்பல்.
இதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் கணவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஒரு குறிப்பிட்ட இன்ஸ்டாகிராமின் அக்கவுண்ட்டை குறிப்பிட்டு அந்த அக்கவுண்டில் எனது மனைவி ஆடை வாங்குவதற்காக 1349 ரூபாயை செலுத்தி இருந்தார். ஆனால் இந்த தொகையை பெற்றவுடன் அந்த அக்கவுண்ட் எனது மனைவியை பிளாக் செய்துவிட்டனர். ஆகவே இது போன்ற மோசடிகளில் யாரும் சிக்க வேண்டாம் என அந்த அக்கவுண்டில் பெயரையும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு இன்ஸ்டாகிராம் மூலம் தனது தொழிலை விருத்தி வருகின்ற சிலர் மீது கொண்டுள்ள நம்பிக்கை தன்மையானது இது போன்று போலியானவர்கள் செய்யும் வேலைகளால் குறைந்து வருகிறது என கமண்டுகள் எழுந்து வருகிறது.