24 special

சின்னப் பிள்ளையாட்டம் பிரேம்ஜீ பார்த்த வேலை! விஜயே மனமுடைந்திருக்கும் நிலையில் இது தேவையா!!

VIJAY
VIJAY

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குறித்து பலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு 19ஆம் தேதி இரவு பலர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அன்றைய தினமே 17 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பிறகு இருபதாம் தேதி மாலை நிலவரம் படி கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. அதனை தொடர்ந்து நேற்று உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்தது. முன்னதாக இதே போன்ற சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் நடந்த பொழுது 21 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு தமிழக அரசுக்கு எதிரான பல கண்டனங்களும், முழக்கங்களும் முன்வைக்கப்பட்டது.


ஆனால் இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காது கள்ளச்சாராயம் சட்ட விரோதமாக விற்கப்படாது என தமிழக அரசு தரப்பில் அடுக்கடுக்கான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டதோடு மட்டுமின்றி அதில் கிட்டத்தட்ட 50 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்து பெரும்பாலானோர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்தி அப்பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உலுக்கி உள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் திமுகவிற்கு எதிரான பல விமர்சனங்களும் கேள்விகளும் தொடர்ச்சியாக பதிவிடப்பட்டு வருகிறது. அதிமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்களையும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் கூட இந்த விவகாரத்தால் திமுகவை நேரடியாக விமர்சனம் செய்து தனது கண்டனத்தை பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி திடீரென கள்ளக்குறிச்சி புறப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக விஜய் மருத்துவமனைக்கு வரும் பொழுது மிகுந்த மனவேதனை உடனும், என்ன கூறி மக்களுக்கு ஆறுதல் கூறுவது என்ற வேதனையிலும் கண்களில் நீர் நிரம்பி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இப்படி ஒட்டுமொத்த தமிழகமே கள்ளச்சாராய சாவுகளால் பெரும் பதட்டத்திலும் கண்ணீரிலும் இருந்து வருகிற நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி செய்த ஒரு செயல் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. 

அதாவது நேற்று முன்தினம் ( ஜூன் 22) விஜயின் ஐம்பதாவது பிறந்த நாள். இன்றைய தினமே விஜய் மாபெரும் மாநாட்டை தனது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. மேலும் அவர் நடித்து வருகின்ற கோட் திரைப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் நடந்துள்ள பெரும் துயர சம்பவம் விஜய்யை மேலும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளதால் விஜய் ரசிகர்களையே விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தயக்கம் காட்ட வைத்துள்ள நிலையில் பிரேம்ஜி விஜயின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டுமொத்தமாக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஜூன் 22 ஆம் தேதி தங்களது முகப்பு பக்கமாக வைத்துக் கொள்ளுங்கள் என விஜய் குறித்த ஒரு போஸ்டரை வடிவமைத்து பதிவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தால் விஜயே அங்கு மனமுடைந்து இருக்கும் பொழுது உனக்கெல்லாம் இது தேவையா இப்படி ஒரு நிலையில் அவர், தனது பிறந்த நாளை கொண்டாடாமல் இருக்கும்போது என் பிரேம்ஜிக்கு இந்தவேலை என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.