இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோக்களுக்கு மத்தியில் 90ஸ்-ல் இருந்து தற்போது உள்ள 2k கிட்ஸ் வரை அனைவருக்கும் ஃபேவரிட் ஹீரோவாக இருந்து வரும் நடிகர் என்றாலே அது அஜித் குமார் மட்டும்தான்!! இவர் தற்போது வரை 61 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து திரையுலகில் நீங்காத இடத்தினை பெற்று அதிக அளவிலே ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்துள்ளார். முதலில் என் வீடு என் கணவன் என்னும் நாடகத்தில் 1990 இல் நடித்து தனது நடிப்பு வாழ்க்கை தொடங்கினார். அதன் பிறகு 5 ஆண்டுகள் பிரேக் எடுத்துவிட்டு ஆசை திரைப்படத்தில் தனது நடிப்பினால் சூப்பராக அழகியது மட்டுமின்றி ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஜி திரைப்படத்தில் நடித்தார்.
ஆசை திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் ஜி திரைப்படம் ஆனது முழுக்க அரசியல் நிறைந்த திரைப்படமாக அமைந்திருந்தது. ஆனால் ஆசை திரைப்படம் கொடுத்த அளவிற்கு வெற்றியை ஜி திரைப்படம் அஜித் குமாருக்கு கொடுக்கவில்லை!! இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அதில் வெற்றி தோல்வி ஆகி இரண்டையுமே கண்டு தற்போது தனக்கான இடத்தினை பிடித்துள்ளார். என்னதான் சில திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அங்கேயே துவண்டு விடாமல் விடாமுயற்சி செய்து இன்று விடாமுயற்சி என்னும் திரைப்படத்திலேயே நடிக்கும் அளவிற்கு தனது திறமையால் முன்னேறி உள்ளார்!! மேலும் இவர் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவதில் பந்தய வீரராகவும், ரேஸ் கார் போன்றவற்றை ஓட்டுபவராகவும் இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து தற்பொழுது விடா முயற்சி என்னும் திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகளுக்கு அஜித் குமாரின் ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாத காலமாகவே இந்த திரைப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்தில் பட சூட்டிங்ன் போது அஜித் குமார் கார் ஓட்டுவது போல காட்சி ஒன்று எடுக்கப்பட்டபோது அந்த காரணத்தை விபத்துக்குள்ளாகி உள்ளே இருந்த நடிகர் அஜித்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனால் தல அஜித் குமாரின் ரசிகர்கள் பெரும் கவலையுடன் இருந்து வந்தார்கள். மேலும் அதன் பிறகு அஜித் குமார் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் இனி மேல் ரேஸ் போன்றவற்றை மட்டுமே செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் அதன் பிறகு மீண்டும் அஜித் குமார் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் அஜித்குமார் அவர்களின் ப்ரோ சுரேஷ் சந்திரா தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்!! அது இந்த திரைப்படம் குறித்த அப்டேட் என்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது!! அது என்ன அப்டேட் என்று பார்த்தால்...
கடந்த ஜூன் 22 ஆம் தேதி அஜித்குமார் அசர்பைஜான் நாட்டுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரப்போகும் வாரங்களில் த்ரிஷா மற்றும் அர்ஜுன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் இணைய உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. வரப்போகும் ஜூலை 22ஆம் தேதிக்கு பிறகு அஜர்பைஜான் நாட்டிலிருந்து ஹைதராபாத்திற்கு சென்று படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளப் போவதாகவும் அத்தோடு இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.