தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி தெரிவித்தார் இதற்கு பதில் தரும் விதமாக இணையத்தில் பல இடங்களில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் குறித்து வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோவை பார்த்த பலர் சைலேந்திர பாபு என்பதற்கு பதிலாக பெயரை சைலன்ட் பாபு என வைத்து கொள்ளலாம் என விமர்சனத்தை வைத்து வருகின்றனர், சென்னை:
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் ஆளும் கட்சி அதிகார துஸ்பரயோகம் செய்வதாக புகார் எழுந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க தடுப்பதாக கண்டனங்கள் எழுந்தன, இந்த சூழலில் தேர்தல் நடைபெற்ற பூத் ஒன்றில் திமுகவினர் அங்கு காவலுக்கு நின்ற காவல் அதிகாரியை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், அத்துமீறி உள்ளே புகுந்து கள்ள ஓட்டு போட வாக்கு சாவடிக்குள் நுழையும் வீடியோ வைரலாகிறது.
குறிப்பாக ஒருவர் 10 ஆண்டு கழித்து நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம் அப்படிதான் இருப்போம் அமைதியாக இரு இல்லை என்றால் டிரான்ஸ்பர் கிடைக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்த வீடியோவை பகிர்ந்து பலர் இப்படி காவல்துறையை மிரட்டும் நபர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன இது தான் அமைதியாக முடிந்த தேர்தலா?
தமிழகத்தில் தேர்தலில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு கிடக்கிறது, புர்காவை நீக்கி முகத்தை காட்ட சொன்ன பாஜக நிர்வாகியை கைது செய்யும் காவல்துறை, இப்படி கள்ள ஓட்டு போட அரசு அதிகாரிகளை மிரட்டும் நபர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்றும் பலர் விமர்சனம் வைக்கின்றனர்.
வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.