Politics

#BREAKING உறுதியானது எடியூரப்பா ராஜினாமா ? புதிய முதல்வர் யார் ,?

Karnataka
Karnataka

கர்நாடகா :- முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். வரும் 25-ம் தேதிக்கு பிறகு பாஜக தலைமையின் வழிகாட்டுதல் படி செயல்படுவேன் எனவும் அவர் இன்று தெரிவித்துள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்ய தயார் என பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்ததாக தகவல் வெளியானது. கர்நாடக பாஜக முதல்வர் தேர்வில் மாற்றம் வரலாம் என செய்திகள் வெளியானது, இந்த நிலையில் தனி விமானத்தில் தனதுமகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் எடியூரப்பா.


அப்போது முதல்வர் பதவியில் இருந்து விலக எடியூரப்பா சில கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும் இது குறித்து பிரதமர் மோடி விரைவில் இறுதி முடிவு எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.  அதேபோல் கட்சி தலைமை கூறினால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியிருந்தார். டெல்லியில் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வகையில் நான் முதல் முதல்வராக இருப்பேன். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகுவேன் என எடியூரப்பா கூறியிருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடக முதலமைச்சராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியில் ஆதரவு எதிர்ப்பு என கலந்து வந்துள்ளது.எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ள நிலையில் விரைவில் அவருக்கு வேறு மாநில கவர்னர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் குறிப்பாக புதுச்சேரி அல்லது டெல்லி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது, அவரது இளைய மகனுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது , இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தின் அடுத்த பாஜக முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.