24 special

எடப்பாடிக்கான டெல்லி கதவு அடைக்கப்பட்டதா? அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி..!


அதிமுக தலைமை யார் என்ற கேள்விக்கு இன்று வரை முழுமையான விடை கிடைக்கவில்லை, ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி வசம் கட்சியின் அலுவலகம் இருக்கிறது கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு இருக்கிறது, மறுபுறம் பன்னீர் செல்வம் பக்கம் இரட்டை இலைக்கு கையெழுத்து போடும் சமமான அங்கீகாரம் தற்போதுவரை இருக்கிறது.


இந்த சூழலில்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இரண்டு தரப்பும் காத்து இருக்கின்றன இந்த சூழலில் பாஜக தலைமையை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இரண்டு தரப்பும் பல்வேறு விதங்களில் அணுகி வந்தனர், ஆனால் எந்த தரப்பிற்கும் சாதகமான முடிவை எடுக்காமல் பாஜக இரண்டு பேரையும் ஒரே விதமாக அணுகி வந்தது.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த தலைவர்கள் பொன்னையன், கேபி முனுசாமி, சிவி சண்முகம் மற்றும் சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் தொடர்ச்சியாக பாஜகவினரை விமர்சனம் செய்து வருவதும் பொது மேடைகளில் தொடர்ச்சியாக பேசி வருவதும் இதுநாள் வரை அமைதியாக இருந்த பாஜக தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாம்.

அதுமட்டுமின்றி உளவு துறை கொடுத்த அறிக்கையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த நிர்வாகிகள் 90 % பேர் பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வருகின்றனர் அவரும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறார் இரட்டை தலைமை இருந்த போது கூட அதிமுக சாதிய கட்சியாக அடையாளப்படவில்லை ஆனால் இப்போது அந்த அடையாளம் விழுந்துள்ளது.

அதிமுக ஒன்று இணைந்தால் குறைந்தது 12 இடங்களில் திமுகவிற்கு டப் பயிட் கொடுக்கலாம் ஆனால் உடைந்தால் வாய்ப்பே இல்லை பாஜக தனித்து நின்று பலத்தை நிரூபிப்பது 2026 கான வாய்ப்பாக அமையும் என குறிப்பிட்டு இருக்கிறார்களாம்.

இது ஒருபுறம் என்றால் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த நிர்வாகிகள் வெளிப்படையாக பாஜகவிற்கு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர், கேபி முனுசாமி மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் ஆய்வு செய்வது தவறு எனவும் கீழ் மட்டத்திற்கு இறங்குகிறார்கள் என பேசினார், சிவி சண்முகம் வெளிப்படையாக பாஜக திமுக கூட்டணி வைக்க போகிறார்கள் என மிரட்டும் தொணியில் பேசி இருக்கிறார்.

இது வெளியில் தெரிந்தது என்றாலும் மறைமுகமாக 2024 தேர்தலில் திமுக கூட்டணியில் தற்போது உள்ள பல கட்சிகளை ஒன்று இணைக்க பழனிசாமி தரப்பு பேசியதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறிதான் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை அணுகினார்களாம் இதுவும் இப்போது டெல்லிக்கு தெரியவந்து விட்டதாம் .

இதையடுத்து இதுநாள் வரை அதிமுக உள் விவாகரத்தில் தலையிடாமல் தவிர்த்து வந்த டெல்லி இனி நேரடியாக நிலைப்பாடு எடுத்து விட்டதாம் யார் மூலம் டெல்லியை எடப்பாடி பழனிசாமி தொடர்புகொண்டு வந்தாரோ அந்த வழிகளும் அடைக்க பட்டு விட்டதாம்.

இவை அனைத்தையும் தாண்டி பாஜக ஒன்றும் ஏமாளி கட்சியல்ல என ஒரே போடாக டெல்லியில் இருந்து செய்தி வந்து இருப்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் டெல்லி வட்டாரங்கள்