24 special

சசிகலா புஷ்பாவின் கணவரை தாக்கிய மர்ம நபர்கள்..! பகீர் பின்னணி!


ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞருக்கு இரவில் நேர்ந்த கொடுமை; விசிகவினர் கைவரிசை! விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காவி பயங்கரவாதம் என்றும், பயங்கரவாத பாசிச அமைப்பு என்றும் தரக்குறைவாக விமர்சித்து வந்தார். இதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திருமா மீது வழக்கு தொடர்வேன் என பிரபல வழக்கறிஞரும், தேசிய மக்கள் நீதிமன்ற உறுப்பினர் ராமசாமி எச்சரித்திருந்தார். 


இந்நிலையில்  மதுரை மாவட்ட காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், எம்.பி. திருமாவளவன் மீது 24 மணிநேரத்திற்குள் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து அவனியாபுரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எம்.பி. திருமாவளவன் கடந்த ஒரு மாதமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு, பாசிச இயக்கம் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகிறார். எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல் ஆர்எஸ்எஸ் மீது அவதூறு பரப்பி வருகிறார். 

ஆர்எஸ்எஸ் என்பது பிரதமர் மோடி முதல் உள்துறை அமைச்சர் வரை  இருக்கும் அமைப்பு, நானும் அதில் இருந்து வளர்ந்து வந்தவன் தான். அப்படிப்பட்ட அமைப்பை பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்துவது முட்டாள் தனமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பை பற்றி எப்படி பயங்கரவாதம் என பேசலாம்.திருமாவளவன் அவர் வெளியிட்ட புத்தகத்தில் கூட ஆர்எஸ்எஸ் என்பது இந்துதுவத்தை உயர்த்திப்பிடிக்கிற சனாதான அமைப்பு எனக்குறிப்பிட்டார். தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வது தொடர்பாக புகார் அளித்திருந்தோம், ஆனால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தை அணுகி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ்  அமைப்பு குறித்து அவதூறாக பேசிய திருமாவளவனை கைது செய்தால் மட்டும் போதாது அவரை எம்.பி. பதவியில் இருந்து தூக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மதுரையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு சென்ற போது அவரது காரை அய்யம்பட்டி நான்கு சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்துள்ளனர். அத்துடன் அவரை காரை தாக்கி கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர். தன்னை தாக்கிவிட்டு திரும்பிய இடத்தில் விசிக கட்சி கொடிகள் கிடந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ராமசாமி மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் ராமசாமி பாஜகவை சேர்ந்த சசிகலா அவர்களின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.