
2019-ஆம் ஆண்டில், மத்திய அரசு 370வது பிரிவை நீக்கியது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அப்போது, ''370வது பிரிவு என்பது காஷ்மீரில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஊழலைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டுவந்தது. மேலும் காஷ்மீரில் எப்போதும் பதற்றமான சூழ்நிலையே நிலவி வந்தது. ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டுவருவது' என்பதே, 2014 முதல் மோதி அரசாங்கத்தின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது. மோதி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, 370வது பிரிவை ரத்து செய்தது.. அதன்பிறகு , ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
"370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, முன்னேற்றம் மற்றும் செழிப்பின் புதிய உச்சங்களை ஜம்மு காஷ்மீர் தொட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் சுதந்திரமாக இருந்து வந்தார்கள். பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகே இந்த காஷ்மீருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. 70 ஆண்டுகள் திறக்காத தியேட்டர் திறக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை போல் இயல்பு நிலைக்கு மாறி கொண்டு வந்தது காஷ்மீர். பல்லாண்டுகளாக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஜம்மு காஷ்மீர் மக்களையும், இந்திய நாட்டையும் 370 பிரிவு குறித்த விஷயத்தில் தவறாக வழிநடத்தின என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் இதற்கு முன்பு 22 லட்சம் முதல் 25 லட்சம் பேர் தான் சுற்றுலா சென்றனர். இப்போது இரண்டரை கோடி பேர் சுற்றுலா செல்கின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஏவிவிட்டு அப்பாவி 26 சுற்றுலா பயணிகளை படுகொலை செய்தது பாகிஸ்தான். பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளும் கை கோர்த்து நடத்திய இந்த கொலைவெறியாட்டத்தால் இந்திய மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.இந்தியர்களின் கோபத்தைக் காட்டும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் வாழ்வாதாரமான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டது மத்திய அரசு; சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு திறப்பதையும் நிறுத்தியது மத்திய அரசு.
இதனிடையே பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என குலைநடுங்கிப் போய் கிடக்கிறது அந்த நாடு. அதுமட்டுமின்றி ராணுவப்படை, விமானப்படை, கடற்படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இதனால் பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது. நம் நாட்டின தாக்குதலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் நம் தாக்குதலை முன்கூட்டியே கணிக்க பாகிஸ்தான் தனது ரேடார் சிஸ்டங்களை எல்லையை நோக்கி நகர்த்தி வருகிறது.
பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக உள்ள பலூசிஸ்தான் மற்றும் சிந்து ஆகியவற்றில் பிரச்சனைகள் உள்ளது. பலூசிஸ்தானில் பதற்றமாக சூழல் ஏற்பட்டு வருகிறது. விரைவில் அது பாகிஸ்தானில் இருந்து பிரிய வாய்ப்புள்ளது. அதேபோல் சிந்து மாகாணம் பிரிவது காலம் தாமதமானாலும் கூட அதுபற்றி எந்த நேரத்திலும் புதிய செய்திகள் வரலாம். அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் நிலைமை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த நாட்டின் நிலைமையை யாரும் மறைக்கவில்லை. பாகிஸ்தானில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. பொதுமக்கள் பசியால் துடித்து இறந்து கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டு போர் போன்ற நிலை அங்கு நிலவி வருகிறது. இந்த விஷயங்களில் இருந்து பாகிஸ்தான் மக்களை திசைதிருப்ப அந்த நாட்டின் ராணுவம் முயற்சி செய்கிறது. இதனால் தான் காஷ்மீர் தாக்குதல் நடந்து இருக்கலாம்.மேலும் பாகிஸ்தானை 3 அல்லது 4 நாடக பிரிப்பதே இந்தியாவின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள். இதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டது.