Politics

முடிவெடுத்த இந்தியா! அடிப்பதற்கு முன்னே பாகிஸ்தானில் எமர்ஜென்சி ... பாகிஸ்தானின் மொத்த எதிர்காலமும் காலி!

pmmodi
pmmodi


ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி அசிம் முனீர் நேரடி தலையீட்டின் கீழ் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ராணுவம் கடுமையான பதிலடியை தர திட்டமிட்டு வருகிறது.  அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்யமுடியாத அளவுக்கு தண்டனை பெற்றுத்தருவோம் என்று பிரதமர் மோடி  கூறினார். அதனை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

இந்தநிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மோடி,

எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம். எதிரிக்கு பதிலடி தர, இலக்குகளை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் ராணுவத்திற்கு உள்ளது. ராணுவம், படைகள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக மரண அடி கொடுக்க வேண்டியது நமது நாட்டின் உறுதிப்பாடு என்றார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பபாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி அசிம் முனீர் நேரடி தலையீட்டின் கீழ் இந்த தாக்குதல் நடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது.பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.பாக். ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்எஸ்ஜியை தேர்ந்தவன்  இதனை தொடர்ந்து இந்தியா பதிலடிக்கு இடத்தை 42 இடத்தை மார்க் செய்துள்ளது. 

இதில்தான் Precision Strike முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. Precision Strike முறையில் முதலில் ஒரு பகுதியில் உள்ள தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் உறுதி செய்யப்படும். அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மட்டும் குறிக்கப்படும். இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்.அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும். 

உளவு பணிகள் முடிந்த பின் தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்படும். எப்படி உள்ளே செல்வது எப்படி வெளியே வருவது.. என்ன மாதிரியான தாக்குதலை நடத்துவது என்று உறுதி செய்யப்படும். தேதி முடிவெடுக்கப்படாது. விமான தாக்குதல் என்றால் எப்படி உள்ளே செல்வது.. தரைவழி தாக்குதல் என்றால் எப்படி நடத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டு பிளான் செய்யப்படும். இதன் அனைத்து வேலைகளையும் முடிந்துவிட்டது இந்தியா. 

தற்போது எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம். எதிரிக்கு பதிலடி தர, இலக்குகளை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் ராணுவத்திற்கு உள்ளது. என பிரதமரும் போருக்கு கீரின் சிக்னல் கொடுத்துவிட்டார். 

இது ஒருபக்கம் இருந்தால் மற்றொரு பக்கம் பாகிஸ்தான் நிலைமை அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக அங்கே மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருளில் 30%-40% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. மிக முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், உயிரியல் தயாரிப்புகள், தடுப்பூசிகள் மற்றும் செரா, குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் மருத்துவ துறையின் ப்யூஸை பிடுங்கி உள்ளது இந்தியா. மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.