24 special

ஸ்டாலினை வாரிவிட்டு முதல்வர் பதவியை பிடிக்கப்போகும் செந்தில்பாலாஜி - பரபர பின்னணி!

Senthil balaji , stalin
Senthil balaji , stalin

செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினுக்கு குழி பறித்து வருகிறார், விரைவில் முதல்வர் பதவியை கைப்பற்றுவார் என தகவல்கள் பரவி வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் கூறிய தகவல்கள் பரபரப்பை ஏற்படடுத்தியுள்ளது. 


திமுகவில் இருக்கும் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை கையில் வைத்துக்கொண்டு முக்கிய அமைச்சராக வலம் வருபவர் செந்தில் பாலாஜி. ஆயத்துறை தீர்வு எனப்படும் டாஸ்மாக் மற்றும் மின்துறை என இரு முக்கிய துறைகளை அவர் கையில் வைத்துள்ளார். மேலும் குறிப்பாக செந்தில் பாலாஜியின் கடந்த கால அரசியல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவர் ஐந்து கட்சி இதுவரை மாறியவர். இதே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் குறிப்பாக ஜெயலலிதா அம்மையார் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் இதே மின்துறையை அமைச்சராக இருந்தவர் தான் செந்தில் பாலாஜி. 

அடுத்தபடியாக ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் டி.டி.வி.தினகரன் தனியே பிரிந்து செல்லும் பொழுது டி.டி.வி.தினகரன் உடன் கைகோர்த்து அமமுக கட்சிக்கு கட்சிக்கு சென்றவர் அங்கு கொஞ்ச காலம் இருந்துவிட்டு பிறகு திமுகவில் சென்று ஐக்கியமானார். இப்படி திமுகவில் ஐக்கியமான பிறகு முதல்வர் ஸ்டாலின் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி, குறிப்பாக திமுகவின் மூத்த அமைச்சர்கள் என கூறப்படும் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி போன்றோர்களை எல்லாம் விட முதல்வர் ஸ்டாலினுக்கும் அதைவிட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தாருக்கும் மிகவும் நெருக்கமாகி போனார் செந்தில் பாலாஜி. 

அதன் விளைவாக எப்பொழுதும் திமுக அரசு என்றால் பொதுப்பணித்துறை துரைமுருகனுக்கு தான் செல்லும், உள்ளாட்சித் துறைக் கே.என்.நேருவுக்கு தான் செல்லும், கூட்டுறவுத்துறை திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கு தான் செல்லும் ஆனால் தற்பொழுது இந்த மூத்த அமைச்சர்களையே ஓரம் கட்டும் அளவிற்கு செந்தில் பாலாஜி துறை முக்கிய துறைகளை திமுக அமைச்சரவையில் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக தற்பொழுது தமிழக அரசுக்கு வருவாய் குவித்து வரும் டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு எந்திரத்தில் முக்கியமான மின்துறை ஆகிய இரு துறைகளும் செந்தில் பாலாஜி'வின் வசம் உள்ளது. இவர் 'கரூர் கம்பெனி' என்ற பெயரில் டாஸ்மாக்கில் வசூலை குவித்து அடாவடி செய்து வருகிறார் எனவும் இவர் குவிக்கும் வசூலை எல்லாம் முதல்வர் குடும்பத்திற்கு கொடுப்பது மட்டுமல்லாமல் என் இடையில் ஒரு இடைத்தேர்தல் மற்றும் கொங்கு பகுதியில் திமுக வளர்வதற்கு செலவிடுகிறார் எனவும் அவ்வப்போது செய்திகள் உலா வந்தன. 

இந்த நிலையில் திமுக-வை கைப்பற்றி முதல்வர் பதவியை கைப்பற்ற செந்தில் பாலாஜி துடிக்கிறார் என சமீப காலமாக சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் தான் அளிக்கும் பேட்டியில் எல்லாம் கூறி வருகிறார். மேலும் அவரது சமூக வலைதளபதிவில் திமுகவில் புதிய தலைவர் உருவாகின்றார் விரைவில் அவர் திமுகவை கைப்பற்றுவார் அதன் காரணமாகத்தான் இவ்வளவு கோடி கோடியாய் செந்தில் பாலாஜி சம்பாதிக்கின்றார், மற்ற அமைச்சர்கள் போல் தானும் தான் குடும்பமும் மட்டும் வாழ சில கோடிகள் சம்பாதித்தால் போதும் ஆனால் செந்தில் பாலாஜி ஒரு அரசாங்கத்தையே நடத்தும் அளவிற்கு சம்பாதித்து வருகிறார் குறிப்பாக திமுக மாவட்ட செயலாளர்கள், முதல்வரின் தனிப்பட்ட பி.ஏ முதல் கிளைக் கழக செயலாளர் வரை அனைவருக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணம் கொடுத்து தனியே கவனித்து வருகிறார், கடைசியாக பொங்கலுக்கு கூட பணம் கொடுத்தார்!  . இதையெல்லாம் செய்வது எதற்காக வருங்காலத்தில் திமுக எனும் கட்சியை கைப்பற்றுவதற்காக' என கூறி வருகிறார் சவுக்கு சங்கர்.

இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி ஈரோடு பிரச்சாரத்தில் கூறிய தகவல் ஒன்று பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஈரோட்டில் எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, 'உங்களை ஏமாற்றுவதற்காகவே ஒருவரை அனுப்பியுள்ளார்கள். அவர்தான் செந்தில் பாலாஜி.  ஆர்.கே. நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து பணம் கிடைக்கும் என்று ஏமாற்றி ஒருவரை (டி.டி.வி.தினகரன்) வெற்றி பெறச் செய்தார். பின்னர் வெற்றி பெற்றவர் அந்தத் தொகுதிக்குச் சென்றபோது மக்கள் கல்லால் அடித்தார்கள். எனவே, இந்தத் தொகுதியில் பணியாற்றி வரும் செந்தில்பாலாஜியை மக்கள் நம்ப வேண்டாம்.

எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு ஆப்பு அடிக்க போறவர் அவர்தான். பச்சோந்தியான அவர் 5 கட்சிகளுக்கு மாறியவர். அவரின் யோசனையில் உருவானது தான் மக்களை பட்டியில் அடைப்பது. எனவே அவர் பேச்சை நம்பி காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள்” என்றார். 

ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகுவார், சிவசேனாவை உடைந்தது போல் தமிழகத்தில் இருக்கும் திமுகவையும் சிலர் உடைக்க வாய்ப்புகள் இருப்பது எனக் கூறினார். அப்போதே எல்லாரும் செந்தில் பாலாஜியை தான் குறி வைத்து பேசினார்கள். தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்தில் கூறும் அளவிற்கு சென்றுள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி'யின்  நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நகர்வுகள்.