24 special

மூனாவது அமைச்சர் இவரா..?முடிஞ்ச் மொத்தமா! ஆட்டம் காணும் அறிவாலயம்..?

Mkstalin
Mkstalin

கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி இருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர்.   மேலும் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து  வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கு வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 


இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் போதிய சாட்சிகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர் என வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தசீலா உத்தரவிட்டார்.

ஆனால் அமைச்சர் பொன்முடி ஒரு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே அமலாக்கத் துறையினரின் சோதனையில் சிக்கினார். கடந்த சில நாட்களாகவே அமலாக்கத் துறையினரின் சோதனையில் முக்கிய திமுக அமைச்சர்கள் சிக்கி வருகின்றனர், முதலாவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரின் சோதனையின் பிடியில் சிக்கி புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் இரண்டாவது நபராக அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை வசம் சிக்கி உள்ளார். அமலாக்கத் துறையினர் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில் நடைபெற்றது போலவே அமைச்சர் பொன்முடியும் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி விசாரணை செய்த நிலையில் ராமச்சந்திரன் மீதும் அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் உதவியாளர் செண்பகமூர்த்திமீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  இந்த வழக்கு நீதிபதி கிறிஸ்டோபர் தலைமைக்கு மாற்ற்ப்பட்டு    கேகே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனும் அவரது மனைவியும் நேரில் ஆஜராகி விளக்கம் அழிக்குமாறு தீர்ப்பளித்து வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உதவியாளர் செண்பகமூர்த்தி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது

தற்பொழுது கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்முடி தற்போது அமலாக்கத் துறை வசம்.  சிக்கி உள்ளார் இவ்வாறாக சொத்துக் குவிப்பு வழக்கில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதால் அமைச்சர் பொன்முடியின் வழக்கில் ஏற்பட்டது போலவே  அமலாக்கத் துறையினரின் அடுத்த ரெய்டு பட்டியலில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அமைச்சர் பொன் முடியின் விவகாரம் போலவே கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அமலாக்கதுரை வசம் சிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் உலா வருவதால் அறிவாலய தலைமை மேலும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.